No menu items!

இயக்குநர் ஷியாம் பெனகல் காலமானார்

இயக்குநர் ஷியாம் பெனகல் காலமானார்

இயக்குநர் ஷியாம் பெனகல் திங்கள்கிழமை காலமானார். அவருக்கு வயது 90. சிறுநீரக பாதிப்பு காரணமாக மும்பையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த aவர் நேற்ரு மாலை காலமானார். அவரது மறைவுக்கு இந்திய திரையுலக பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

திரைப்பட இயக்குநர், திரைக்கதை எழுத்தாளர் என பன்முகத்திறமை கொண்டவர் ஷியாம் பெனகல். இவர் கடந்த 14-ம் தேதியன்று தனது 90 வது பிறந்த நாளை கொண்டாடினார். இதில் முக்கிய சினிமா பிரபலங்கள் கலந்து கொண்டு அவரை வாழ்த்தியுள்ளனர்.

1934ஆம் ஆண்டில் செகந்திராபாத்தில் உள்ள திருமலகிரி பகுதியில் பிறந்த ஷ்யாம் பெனகல், இளம் வயது முதல் சினிமா ஆர்வம் கொண்டிருந்தார். 1974ஆம் ஆண்டு ’ஆங்கூர்’ திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமானார். பின்னர் ’மந்தன்’ (1976), ’பூமிகா’ (1977), ’சர்தாரி பேகம்’ (1996) உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார். 1970 மற்றும் 80 காலகட்டங்களில் சுயாதீன இயக்குநர்களில் முக்கியமானவராக திகழ்ந்தார்.

யாத்ரா (1986) மற்றும் பாரத் ஏக் கோஜ் (1988) போன்ற மைல்கல் தொடர்கள் உட்பட பல முக்கிய தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் ஆவணப்படங்களின் தொகுப்புகளையும் இயக்கினார். ஜவஹர்லால் நேருவின் டிஸ்கவரி ஆஃப் இந்தியா புத்தகத்தை அடிப்படையாகக் கொண்ட 53-எபிசோட் பாரத் ஏக் கோஜ், இந்தியாவின் 5,000 ஆண்டுகால வரலாறு, தொன்மங்கள் மற்றும் நெறிமுறைகளை ஈர்க்கும் கதை மூலம் பார்வையாளர்களுக்கு அறிமுகப்படுத்திய ஒரு லட்சியத் திட்டமாகும்.

ஷ்யாம் பெனகல் சிறந்த இயக்குநருக்கான தேசிய விருதை 5 முறை வென்றுள்ளார். அதேபோல் அவரது திரைப்படங்கள் 8 முறை தேசிய விருதுகள் வென்றுள்ளது. மேலும் உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருதை வென்றுள்ளார். வயது முதுமை மற்றும் சிறுநீரக கோளாறு போன்ற பிரச்னைகளால் நீண்ட நாட்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று மாலை மருத்துவமனையில் காலமானார்.

ஷியாம் பெனகல் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, “இந்திய சினிமாவில் தனது கதைகள் மூலம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய ஷ்யாம் பெனகல் மறைவு, வேதனையை ஏற்படுத்தியுள்ளது. அவரது கதைகள் எப்போதும் மக்கள் மனதில் இடம் பிடித்திருக்கும். அவரை இழந்து வாடும் குடும்பத்தினர் மற்றும் ரசிகர்களுக்கு எனது இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வெளியிட்டுள்ள இரங்கல் பதிவில், “இந்தியாவின் கதைகளை தனது இயக்கத்தின் மூலம் ஆழமாகவும் உணர்ச்சிப்பூர்வமாகவும் சொன்ன ஷ்யாம் பெனகல் மறைந்தது வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரது குடும்பத்தினர் மற்றும் ரசிகர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்” என கூறியுள்ளார்.

நடிகர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள இரங்கல் பதிவில் “நம் காலத்தில் மனிதாபிமான கதைகளை சொல்லும் இயக்குநரை இந்தியா இழந்துவிட்டது. நான் எனது குருவை இழந்துவிட்டேன். ஷ்யாம் பெனகல் தனது லென்ஸ் மூலம் இந்தியாவை தத்ரூபமாக திரையில் கொண்டு வருபவர். மேலும் ஆழமான சமூக கருத்துக்களை மிகவும் சாதாரணமாக கையாள்பவர். ஷ்யாம் பெனகலை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், நண்பர்கள் ஆகியோருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்” என கூறியுள்ளார். மேலும் பாலிவுட் பிரபலங்கள் அமிதாப் பச்சன், மனோஜ் பாஜ்பாய், தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி உள்ளிட்ட பலர் ஷ்யாம் பெனகல் மறைவிற்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...