பாலா இயக்கத்தில், அருண் விஜய் ஹீரோவாக நடித்துள்ள படம், ‘வணங்கான் ரோஷினி பிரகாஷ், மிஷ்கின், சமுத்திரக்கனி உட்பட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். படத்தை சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ளார். ஒருகையில் பெரியார் சிலையும், மறு கையில் விநாயகரையும் அருண் விஜய் ஏந்தியிருக்கும் முதல் பார்வை ரசிகர்களிடையே கவனம் பெற்றது.
ட்ரைலர் முழுவதும் அருண் விஜய்யின் ஆக்ஷன் காட்சிகள் தான் உள்ளது. போலீசாக சமுத்திரகனியும், நீதிபதியாக மிஸ்கினும் மிரட்டியுள்ளனர். ரத்தம் தெறிக்க தெறிக்க நிறைய சண்டைகாட்சிகள் நிரம்பியுள்ளது. ஜிவி பிரகாஷின் இசையும் படத்திற்கு மெருகேற்றியுள்ளது. இந்த நிலையில் படத்தை சமீபத்தில் அருண் விஜய் குடும்பத்தினருக்கு தயாரிப்பாளர் திரையிட்டு காட்டியிருக்கிறார். படத்தைப் பார்த்து விட்டு கண்ணீர் விட்டு அழுது விட்டார். நடிகர் விஜயகுமார். அருண் விஜய்யும் உணர்ச்சி வசப்பட்டு பாலாவுக்கு கடிதம் எழுதியிருக்கிறார். அதில் அவர்,
மன நெகிழ்வுடனும் கனத்த இதயத்துடனும், என் இயக்குனர் பாலா சார் அவர்களுக்கு, நான் திரையுலகில் கால் பதித்த காலத்தில் இருந்து, உங்கள் படைப்புகளின் ரசிகனாகவும், உங்களைக் கண்டு வியந்து, நேசித்து, ஒரு நடிகனாக “எனக்கும் இப்படி ஒரு வாய்ப்பு கிடைக்காதா” என ஏங்கியவனுக்கு தங்களின் இயக்கத்தில் பணியாற்ற ‘வணங்கான்’ படத்தின் மூலம் வாய்ப்பளித்தமைக்கு மனமார்ந்த நன்றிகள். நம் படப்பிடிப்பின் பொழுது கூட இக்கதையின் பாதிப்பை நான் முழுமையாக உணரவில்லை. ஆனால் அதனை இப்பொழுது வெள்ளித்திரையில் காண்கையில்,
என் உணர்ச்சிகளை வெளிப்படுத்த வார்த்தைகள் இல்லை. என் பெற்றோரை பெருமையில் நெகிழ்வடைய செய்தமைக்கு உங்களை வணங்குகிறேன் எனது திரையுலக பயணத்தில், வணங்கான் ஒரு மிக முக்கியமான பாகமாக அமையும் என்பதில் எனக்கு துளி அளவும் சந்தேகமில்லை! இப்படைப்பின் மீது முழுமையான நம்பிக்கை வைத்து, பக்க பலமாக இருந்து கொண்டிருக்கும் சுரேஷ் காமாட்சி அவர்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்.
மக்கள் அனைவரும் இப்படத்தை விரைவில் திரையில் காணும் நாளை மிகவும் ஆவலுடன் எதிர்நோக்கி காத்துக் கொண்டிருக்கும். என்று குறிப்பிட்டிருக்கிறார்.
இந்த நிலையில் படத்தில் இதற்கு முன்பாக நடிக்க இருந்த சூர்யாவை இணையத்தில் ரசிகர்கள் மீம்ஸ் போட்டு கலாய்த்து வருகிறார்கள். வணங்கான் படத்தில் சூர்யா விலகிக்கொள்வது தொடர்பாக பாலா எழுதிய கடிதத்தையும் பகிர்ந்து வருகிறார்கள். அந்த கடிதத்தில் பாலா வணக்கம், என் தம்பி சூர்யாவுடன் இணைந்து ‘வணங்கான்’ என்ற புதிய திரைப்படத்தை இயக்க விரும்பினேன். ஆனால், கதையில் நிகழ்ந்த சில மாற்றங்களினால், இந்தக் கதை சூர்யாவுக்கு உகந்ததாக இருக்குமா என்கிற ஐயம் தற்போது எனக்கு ஏற்பட்டுள்ளது.என் மீதும் இந்தக் கதையின் மீதும் முழு நம்பிக்கையுடன் இருக்கிறார் சூர்யா. இவ்வளவு அன்பும் மதிப்பும் நம்பிக்கையும் வைத்திருக்கும் என் தம்பிக்கு, ஒரு அண்ணனாக என்னால் ஒரு சிறு தர்மசங்கடம்கூட நேர்ந்துவிடக் இருக்கிறது கூடாது என்பது என் கடமையாகவும் இருக்கிறது.