No menu items!

சைபர் க்ரைம் போலீஸ் – வங்கிகள் இணைந்து சைபர் குற்​ற​வாளி​களுக்கு செக்

சைபர் க்ரைம் போலீஸ் – வங்கிகள் இணைந்து சைபர் குற்​ற​வாளி​களுக்கு செக்

சைபர் க்ரைம் போலீ​ஸார்- வங்கி அதி​காரி​கள் ஒருங்​கிணைந்து செயல்பட வேண்​டும் என மாநில அளவி​லான ஒருங்​கிணைப்பு கூட்​டத்​தில் முடிவு செய்​யப்​பட்​டது.

சைபர் குற்​ற​வாளி​கள்’ பொது மக்களின் கோடிக் கணக்​கான பணத்தை சுருட்டி விடு​கின்​றனர்.

இது​போன்ற இணை​ய​வழி நிதி மோசடி மற்​றும் அதை தடுப்​ப​தற்கான வழி​முறை​கள் குறித்த மாநில அளவி​லான ஒருங்​கிணைந்த ஆலோ​சனைக் கூட்​டம் சைபர் க்ரைம் போலீ​ஸார் மற்​றும் வங்கி அதி​காரி​களிடையே நேற்று நடை​பெற்​றது.

சென்னை அசோக் நகரில் உள்ள மாநில சைபர் க்ரைம் அலு​வல​கத்​தில் நடை​பெற்ற இக்​கூட்​டத்​துக்கு கூடு​தல் டிஜிபி சந்​தீப் மித்​தல் தலைமை தாங்​கி​னார். இந்​தியா முழு​வ​தி​லும் இருந்து 34 முக்​கிய வங்​கி​களைச் சேர்ந்த மூத்த அதி​காரி​கள் கலந்து கொண்​டனர்.

இக்​கூட்​டத்​தில் சந்​தேகத்​துக்கு இடமான கணக்​கு​களை முடக்​கு​ வ​தில் சரி​யான நேரத்​தில் உதவுவதற்​காக சைபர் க்ரைம் தலை​மையத்​தில் வங்கி பிர​தி​நி​தி​களை நியமிக்க வேண்​டும், விசா​ரணைக்கு உதவுவதற்​காக வங்​கி​களின் தரவு​களை மேம்​படுத்த வேண்​டும், போலி கணக்​கு​களை அடை​யாளம் காண வேண்​டும் என வலி​யுறுத்​தப்​பட்​டது.

அதோடு மட்​டும் அல்​லாமல் சைபர் நிதி மோசடியை தடுக்க போலீ​ஸார் மற்​றும் வங்கி அதி​காரி​கள் ஒருங்​கிணைந்து செயல்பட வேண்​டும், போலி வங்கி கணக்​கு​களை அடை​யாளம் கண்டு அவற்றை முடக்க வேண்​டும் என கூடு​தல் டிஜிபி சந்​தீப் மித்​தல் வலியுறுத்​தி​னார். மேலும், இக்​கூட்​டத்​தில் சைபர் குற்​றம் நடை​பெற்று விட்​டால் அதுதொடர்​பாக புகார் அளிக்​கும் வகை​யில் 1930 என்ற எண் பொது ​மக்​கள் அனை​வரை​யும் சென்​றடை​யும் வகை​யில் விழிப்​புணர்வு செய்ய வேண்​டும் என கூட்​டத்​தில்​ முடிவு செய்யப்​பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...