ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள கூலி திரைப்படம் 100 நாடுகளில் வெளியானது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள கூலி திரைப்படம், பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் தமிழகத்தில் வெளியாகியுள்ளது.
இன்று அதிகாலை முதலே திரையரங்குகளில் குவிந்த ரஜினியின் ரசிகர்கள், பட வெளியீட்டை மிக பிரம்மாண்டமாகக் கொண்டாடி வருகின்றனர்.
ஏற்கெனவே, கேரளம், கர்நாடகம் உள்ளிட்ட மாநிலங்களில் கூலி திரைப்படம் வெளியாகி முதல் காட்சி திரையிடப்பட்டு வருகின்றது.
நீண்ட காலத்துக்கு பிறகு, ஏ சான்றிதழுடன் வெளியாகும் ரஜினியின் படம் என்பதால் ரசிகர்கள் பெரும் ஆவலுடன் இருக்கின்றனர். இதுவரை இல்லாத அளவிற்கு பெரும் வசூலை நிகழ்த்தி, முதல் நாளே கூலி திரைப்படம் சாதனை படைக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.