சென்னை ஈ.சி.ஆரில் பெண்கள் சென்ற காரை பின் தொடர்ந்து வழக்கு தொடர்பாக 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டு 4 பேர் கைதாகி உள்ளனர். எஞ்சிய 3 பேரை தேடி வருவதாக பள்ளிக்கரணை துணை காவல் ஆணையர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார். கானாத்தூர் காவல் நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்; பெண்கள் சென்ற காரை பின் தொடர்ந்து சென்ற வழக்கில் கல்லூரி மாணவர் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், சென்னை ஈ.சி.ஆர். வழக்கில் 7 பேர் ஈடுபட்டுள்ளனர்; இன்னும் 3 பேர் கைது செய்யப்பட வேண்டும். பெண்கள் ஓட்டிச் சென்ற கார் இளைஞர்கள் வந்த காரை இடிக்கவில்லை. காரை துரத்திய சம்பவத்தில் கைதான நால்வரில் சந்துரு என்பவர் மீது 2 குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வதில் தாமதம் ஏற்படவில்லை. புகார் வந்தவுடனே சி.எஸ்.ஆர். பதிவு செய்து முதற்கட்ட விசாரணை மேற்கொள்ளப்பட்டது. புகார் அளிக்கப்பட்ட 10 நிமிடங்களில் காவல்துறையினர் வீட்டிற்கே சென்று விசாரித்தனர். இவ்வாறு காவல் துணை ஆணையர் கார்த்திகேயன் விளக்கம் அளித்துள்ளார்.