இடுப்பொடிய வேலை பார்த்தாலும், ஆண்களுக்கு இணையாக தங்களுக்கு சம்பள உயர்வோ, பதவி உயர்வோ கிடைப்பதில்லை என்பது நம் நாட்டு பெண்களின் புலம்பல். ஆனால் இந்த பிரச்சினை நம் நாட்டில் மட்டுமல்ல… உலக அளவில் இப்பிரச்சினை இருக்கிறது. அமெரிக்காவில் மிகச் சமீபத்தில் வெளியான ஒரு ஆய்வறிக்கை இதை வெளிச்சம் போட்டு காட்டுகிறது.
ஷெரில் சாண்ட்பெர்க்கின் leanin.org இணையதளம் மற்றும் McKinsey & Co. நிறுவனம் இணைந்து சமீபத்தில் “women in workplace” (உமன் இன் வொர்க்ஸ்பேஸ்) என்ற ஆய்வை நடத்தியுள்ளனர். , இந்த ஆய்வில் ஆண்களை விட பெண்கள் குறைந்த அளவில் பதவி உயர்வு பெறுவதாக தெரியவந்துள்ளது . நிறத்தின் அடிப்படையிலும் பெண்கள் ஒடுக்கப்படுவதாக ஒரு அதிர்ச்சி தகவலையும் இந்த ஆய்வு தெரிவிக்கிறது.
அமெரிக்கா மற்றும் கனடா நாடுகளில் சுமார் 276 நிறுவனங்களில் “women in workplace”, என்ற இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.
மேலாளர் போன்ற உயர் பதவிகளை வகிக்க பெண்களுக்கு தகுதி , திறமை இருந்தும் அவர்களை விட ஆண்களைத்தான் அதிக அளவில் உயர் பதவிகளுக்கு தேர்வு செய்கிறார்கள். சராசரியாக 100 ஆண்கள் பதவி உயர்வு பெறும்போது, 87 சதவீத பெண்கள் மட்டுமே பதவி உயர்வு பெறுகிறார்கள் என்று இந்த ஆய்வு தெரிவிக்கிறது.
இன்னொரு வருத்தம் தரும் தகவலையும் இந்த ஆய்வு வெளியிட்டுள்ளது. வெள்ளை நிறம் கொண்ட பெண்களைவிட கருப்பு நிறப் பெண்கள் உயர்பதவிக்கு செல்வது பெரிய சாவலாக இருக்கிறது என்பதே அந்த தகவல். சராசரியாக 100 ஆண்கள் பதவி உயர்வு பெறும்போது கருப்பினத்தைச் சேர்ந்த 54 சதவீத பெண்கள் மட்டுமே பதவி உயர்வு பெறுகிறார்கள்.
பெண்கள் வேலைக்கு செல்லும் சதவீதம் அதிகரித்துள்ளது என்றாலும், தகுதி இருந்தும் உயர் பதவிகளுக்குப் பெண்களை எடுப்பதில்லை என்பதும் அந்த அறிக்கையில் தெரியவந்துள்ளது.
கொரோனாவிற்கு பிறகு பெண்கள் வேலைக்கு செல்வது அதிகரித்துள்ளது. குறிப்பாக, 30 வயதிற்குள் உள்ள பெண்கள் தான் மிகவும் லட்சியதுடனும் கரியரில் சாதிக்க வேண்டும் என்கிற முனைப்போடும் செயல்படுகிறார்கள்.
குழந்தைகளை வைத்துகொண்டு வேலைக்கு செல்லும் பெண்கள், அவர்கள் நெகிழ்வுதன்மையை விரும்பவில்லை என்றாலும், வேலை செய்யும் நேரத்தைக் குறைப்பது அவசியமாகிறது. இந்த சூழல் இருப்பத்தால் பெண்கள் நெகிழ்வுதன்மையை எதிர்பார்பார்கள் என்று உயர் பதவிகளில் பெண்களை அதிகம் எடுப்பதில்லை என்று இந்த ஆய்வு தெரிவிக்கிறது.
களத்தில் அதிகநேரம் இருந்து வேலை செய்வது ஆண்கள் தான். பெண்கள் தொலைதூர வேலையும் வொர்க் ஃப்ரம் ஹோம் தான் அதிக அளவில் செய்வதால் வாய்ப்புகள் மறுக்கப்படுகின்றன. ஆண்கள் எந்த அளவுக்கு கலத்தில் வேலைசெய்கிறார்களோ அதே அளவுக்கு பெண்களும் கடுமையாக உழைக்கின்றனர்.
“பெண்கள் சோம்பேறிகள், அதிருப்தி கொண்டவர்கள் நெகிழ்வுதன்மையை எதிர்பார்பவர்கள் என்கிற கருத்து மிகவும் வருத்தமளிக்கிறது’ என்கிறார் ஷெரில் சாண்ட்பெர்க்.