No menu items!

சந்தா கோச்சார் குற்​ற​வாளி என தீர்ப்​பா​யம் உறுதி

சந்தா கோச்சார் குற்​ற​வாளி என தீர்ப்​பா​யம் உறுதி

ஐசிஐசிஐ வங்கி முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி சந்தா கோச்சார், வீடியோகான் நிறுவனத்துக்கு கடன் வழங்க ரூ.64 கோடி லஞ்சம் பெற்றது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என தீர்ப்பாயம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து தீர்ப்பாயம் தனது உத்தரவில் தெரிவித்துள்ளதாவது: அமலாக்கத் துறை வழங்கிய ஆதாரங்களின்படி சந்தா கோச்சார் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி தனது கணவர் தீபக் கோச்சார் மூலம் வீடியோகான் குழுமத்திலிருந்து ரூ.64 கோடி லஞ்சம் பெற்றது நிரூபணமாகியுள்ளது. இந்த லஞ்ச பணம் தீபக் கோச்சாரின் என்ஆர்பிஎல் நிறுவனத்துக்கு மடைமாற்றப்பட்டு மோசடி செய்யப்பட்டுள்ளது.

வீடியோ​கான் நிறு​வனத்​துக்கு விதி​களை மீறி ரூ.300 கோடி கடன் வழங்க அனு​மதி அளித்​ததற்​காக சந்தா கோச்​சா​ருக்கு அவரது கணவர் மூலம் லஞ்​ச பணத்தை வீடியோ​கான் குழு​மம் வழங்​கி​யுள்​ளது. இதற்​கான ஆதா​ரங்​கள் பிஎம்​எல்ஏ சட்ட பிரிவு 50-ன் கீழ் நம்​பக்​கூடிய வகை​யில் கிடைத்​துள்​ளது.

இதன் மூலம் சந்தா கோச்​சா​ருக்கு தொடர்​புடைய ரூ.74 கோடி சொத்​துகளை அமலாக்​கத் துறை முடக்​கி​யுள்​ளதை மேல்​முறை​யீட்டு தீர்ப்​பா​யம் உறுதி செய்​கிறது. ஐசிஐசிஐ வங்​கி, கடன் வழங்​கிய மறு​நாளே வீடியோ​கான் குழு​மத்​தின் எஸ்​இபிஎல் நிறு​வனம் மூலம் ரூ.64 கோடியை தீபக் கோச்​சா​ரின் நிறு​வனத்​துக்கு மாற்​றி​யுள்​ளது.

வீடியோ​கான் குழு​மத்​துக்கு கடன் வழங்க தனிப்​பட்ட முறை​யில் ஆதர​வாக செயல்​பட்ட சந்தா கோச்​சார் குற்​ற​வாளி என்​பது உறுதி செய்​யப்​படு​கிறது. இவ்​வறு தீர்ப்​பா​யம் உத்​தர​வில் தெரிவித்​துள்​ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...