No menu items!

52 கண்காணிப்பு செயற்கைக்கோள் ஏவும் மத்​திய அரசு

52 கண்காணிப்பு செயற்கைக்கோள் ஏவும் மத்​திய அரசு

ஆபரே ஷன் சிந்​தூர் நடவடிக்கை எடுக்​கப்​பட்ட பிறகு, இந்​திய எல்​லைகளை கண்​காணிக்க 52 செயற்​கைக் கோள்​களை ஏவும் பணியைதீவிரப்​படுத்த மத்​திய அரசு திட்​ட​மிட்​டுள்​ளது.

காஷ்மீரில் உள்ள பஹல்​காமில் தீவிர​வா​தி​கள் நடத்​திய தாக்​குதலுக்கு பதிலடி கொடுக்க பாகிஸ்​தானுக்கு எதி​ராக ஆபரேஷன் சிந்​தூர் தாக்​குதலை மத்​திய அரசு நடத்​தி​யது. இந்​நிலை​யில், இந்​திய எல்​லைகள் மற்​றும் எதிரி நாடு​களின் நிலப்​பரப்​பு​களை தொடர்ந்து கண்​காணிக்​க​ 52 கண்​காணிப்பு செயற்​கைக் கோள்​களை விண்​ணில் ஏவும் பணியை மத்​திய அரசு தீவிரப்​படுத்தி உள்​ளது.

இந்த திட்​டத்தை மத்​திய அரசு கடந்த ஆண்டே முடிவு செய்​தது. மேலும், ராணுவத்​துக்​காக மட்​டும் பிரத்​யேக​மாக விண்​வெளி கொள்​கையை கொண்டு வரவும் மத்​திய அரசு முடிவு செய்​துள்​ளது. அதன்​படி விண்​ணில் இருந்து கண்​காணிக்​கும். 3-ம் கட்ட திட்​டத்​துக்கு கடந்த ஆண்டு அக்​டோபர் மாதம் பிரதமர் மோடி தலை​மை​யில் நடை​பெற்ற மத்​திய அமைச்​சரவை கூட்​டத்​தில் ஒப்​புதல் வழங்​கப்​பட்​டது.

ரூ.26,968 கோடி: இத்​திட்​டம் ரூ.26,968 கோடி செல​வில் செயல்​படுத்​தப்பட உள்​ளது. இதில் 21 செயற்​கைக் கோள்​கள் தயாரிப்பு மற்​றும் விண்​ணில் ஏவும் பணியை இஸ்​ரோ​வும், 31 செயற்​கைக் கோள்​கள் மற்​றும் விண்​ணில் ஏவும் பணியை தனி​யார் நிறு​வனங்​களும் மேற்​கொள்​ளும்.

அடுத்த ஆண்டு ஏப்​ரல் மாதத்​துக்​குள் முதல் கட்​ட​மாக சில கண்​காணிப்பு செயற்​கைக் கோள்​கள் விண்​ணில் ஏவப்​படும். வரும் 2029-ம் ஆண்​டுக்​குள் மொத்​தம் 52 செயற்​கைக் கோள்​களும் விண்​ணில் ஏவப்​பட்டு விடும். இதற்​கான பணி​களை மத்​திய அரசு தீவிரப்​படுத்தி உள்​ளது. மேலும், செயற்​கைக் கோள் ஏவும் ஒப்​பந்​தத்​தைப் பெற்​றுள்ள 3 தனி​யார் நிறு​வனங்​கள், தங்​கள் பணி​களை விரைவுப்​படுத்த மத்​திய அரசு உத்​தர​விட்​டுள்​ளது.

இந்​திய கண்​காணிப்பு செயற்​கைக் கோள்​கள் விண்​ணில் ஏவப்​பட்ட பிறகு, சீனா, பாகிஸ்​தானின் நிலப்​பரப்பு மற்​றும் இந்​திய பெருங்​கடல் பகு​தி​களை தொடர்ந்து 24 மணி நேர​மும் துல்​லிய​மாக கண்​காணிக்க முடி​யும். பாகிஸ்​தானுக்கு எதி​ராக ஆபரேஷன் சிந்​தூர் தாக்​குதலின் போது, இந்​தி​யா​வின் கார்​டோசேட் செயற்​கைக் கோள் மிக முக்​கிய பங்கு வகித்​தது. பாகிஸ்​தானில் ராணுவத்​தின் நடமாட்​டங்​களை இந்த செயற்​கைக்​கோள் கண்​டறிந்து இந்​திய பாது​காப்​புப்​ படைகளுக்​கு வழங்​கியது குறிப்​பிடத்​தக்​கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...