No menu items!

சர்க்கரை நோய் இருந்தால் ‘செக்ஸ்’ முடியாதா?

சர்க்கரை நோய் இருந்தால் ‘செக்ஸ்’ முடியாதா?

Sexologist Dr. Narayana Reddy Explains

உலக அளவில் மக்களை அச்சுறுத்தி வரும் நோய்களில் முதன்மையானது சர்க்கரை நோய். சர்க்கரை நோய் பாதிப்பு அதிகம் உள்ள நாடுகளில் முதன்மையானது இந்தியா. சர்க்கரை நோயின் தலைநகரம் என்றே இந்தியா அழைக்கப்படுகிறது. ஒருவருக்கு சர்க்கரை நோய் வந்தால் அதன் தொடர்ச்சியாக பல்வேறு பாதிப்புகள் ஏற்படும். செக்ஸ் வாழ்க்கையையும் சர்க்கரை நோய் பாதிக்கும். சரி, சர்க்கரை நோய் பாதிப்பு உள்ளவர்கள் ஒரு மகிழ்ச்சியான செக்ஸ் லைஃபை மேற்கொள்வது முடியாதா? முடியும்.

சரி, பிரச்சினைகள் என்ன, அதற்கான தீர்வுகள் என்ன என பார்ப்போம்.

ஆண்களைப் பொறுத்தவரைக்கும் விறைப்புத் தன்மை கோளாறு, துரித ஸ்கலிதம் எனப்படும் முன்கூட்டியே விந்து வெளியேறுதல், விந்து வெளியே வராமல் சிறுநீரக பைக்குள் செல்வது போன்ற சில பிரச்சினைகள் இருக்கும்.

பெண்களைப் பொறுத்தவரைக்கும் செக்ஸில் ஈடுபட்டாலும் இன்பம் கிடைக்காத நிலை, உடலுறவின் போது வலி போன்ற பிரச்சினைகள் இருக்கும்.

சர்க்கரை பாதிப்பால் பிறப்புறுக்கான ரத்தக் குழாய் பாதிக்கப்பட்டு ரத்த ஓட்டம் குறையும். இதனால், ஆணுக்கு விறைப்புத் தன்மையில் கோளாறு ஏற்படுகிறது. பெண்களுக்கு உடலுறவின் போது இன்பம் கிடைக்காமல் இருப்பதற்கும் இதுதான் காரணம். அதாவது கிளிட்டோரிஸுக்கான ரத்தம் குறைவதால் இந்த பிரச்சினை ஏற்படுகிறது.

இதுபோல் நரம்பு மண்டலத்தில் ஏற்படும் பாதிப்பு காரணமாக ஆண்களுக்கு துரித ஸ்கலிதம் ஏற்படும். பெண்களுக்கு லூப்ரிகேசனில் பாதிப்பு ஏற்படும். இதனால்தான், உரசல் ஏற்பட்டு வலி உருவாகிறது.

ஆனால், இதற்காக இனி செக்ஸ் வாழ்க்கை அவ்வளவுதான் என சோர்ந்து போக அவசியமில்லை. இதற்கு தீர்வு இருக்கிறது, ஆண் – பெண் இருவருடைய பிரச்சினைகளுக்கும் மருந்து – மாத்திரைகள் இருக்கிறது.

விறைப்புத்தன்மை குறைபாடுக்கு வயாகரா போன்ற பல மாத்திரைகள் இருக்கின்றன. இது ரத்தக் குழாய்களை விரிவாக்கி ரத்த ஓட்டத்தை அதிகப்படுத்தும். பெண்களுக்கு லூப்ரிகேசன் பாதிப்புக்கு செயற்கையான லூப்ரிகண்டுகளை பயன்படுத்தலாம். சில பெண்களுக்கு நாட்டம் குறைவாக இருக்கும். இதற்கும் மாத்திரைகள் உள்ளன.

ஆனால், அந்த மருந்துகளை எடுத்துக்கொள்ளும் முன் முதலில் நாம் செய்ய வேண்டியது சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள வேண்டும்.

இரண்டாவது இதற்கான மருந்து, மாத்திரைகளை மெடிக்கல் ஸ்டோர்களில் கேட்டு வாங்காமல் மருத்துவர்களை ஆலோசித்துதான் வாங்க வேண்டும். ஏனெனில், ஒவ்வொருவருக்கும் தனித்துவமான பிரச்சினைகளை இருக்கும். அதனால் சில மருந்துகள் ஒத்துக்கொள்ளாது. எனவே, அதை தெரிந்துகொண்டு மருத்துவர்கள் மருந்துகளை பரிந்துரை செய்வார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...