பிக் பாஸ் நிகழ்ச்சி பரபரப்பு கட்டத்தை எட்டியுள்ளது. போட்டியாளர்கள் ஒருவருக்கொருவர் கடும் போட்டியாக நடந்து கொண்டிருக்கிறது. இதில் முத்துக்குமரன் எல்லோருக்கும் கடுமையான போட்டியாளராக மாறியிருக்கிறார். அதோடு இந்த வாரம் அருண் பிரசாத் முத்துக்குமரனை டார்கெட் வைத்து பேசி வருவது அதிகரித்திருக்கிறது.
இதனால் இணையத்தில் முத்துக்குமரனுக்கும் ஆதரவாகவும், அருண் பிரச்சத்திற்கு எதிராகவும் கடுமையாக பதிவு செய்து வருகிறார்கள். இதில் அதிர்ச்சி என்னவென்றால் அருண் பிரச்சத்தின் மனம் கவர்ந்த தோழியாக இருப்பவர் அர்ச்சனா. இவரை குறி வைத்து சிலர் கடுமையாக பேசி வருகிறார்கள்.
முன்னாள் டைட்டில் வின்னர் அர்ச்சனா பிக் பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசனில் டைட்டில் வின்னராக தேர்வு செய்யப்பட்டவர் இவர் கடந்த சீசனில் வைல்டு கார்டு போட்டியாளராக உள்ளே வந்தாலும், டைட்டிலை தட்டிச் சென்றார். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் சினிமாவில் நடித்து வரும் அர்ச்சனா, தற்போது பிக் பாஸ் ரசிகர்களால் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
தற்போது நடைபெற்று வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் 8-வது சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டுள்ள அருண் பிரசாத் தான். அர்ச்சனாவின் காதலன் என்பது அனைவரும் அறிந்ததே. இந்த சீசனில் முதல் சில வாரங்கள் சைலண்ட் மோடில் இருந்த அருண் பிரசாத், தற்போது சண்டை சேவல் போல் மாறி இருக்கிறார். குறிப்பாக இந்த சீசனில் அதிக ஆதரவை பெற்றுவரும் போட்டியாளரான முத்துக்குமரன் உடன் அடிக்கடி சண்டையிட்டு வருகிறார்.
இதனால் அருண் பிரசாத்தை ஆதரித்து வரும் அவரின் காதலியான அர்ச்சனா மீது முத்துக்குமரன் ரசிகர்கள் சமூக வலைதளம் வாயிலாக சண்டையிட்டு வருகின்றனர். கடந்த வாரம் தான் ஒரு தோழியாக அருணுக்கு ஆதரவளித்து வருவதாகவும் அவரின் செயல்களுக்கு தான் பொறுப்பாக முடியாது என்றும் பதிவிட்டு இருந்தார் அர்ச்சனா. இந்த நிலையில், தற்போது முத்துக்குமரனின் ரசிகர்கள் தனக்கு மிரட்டல் விடுப்பதாக பதிவிட்டுள்ளது சோசியல் மீடியாவில் பேசுபொருள் ஆகி உள்ளது.
இதுகுறித்து அவர் போட்டுள்ள பதிவில், வாழ்க்கை என்பது கிரிக்கெட் மாதிரி, தங்களுக்கு பிடித்த அணி கடைசி போட்டி விளையாடினாலும் அவர்களுக்கு ஆதரவளிக்க தவறுவதில்லை. எனக்கு தொடர்ந்து மிரட்டல்கள் வருகின்றன. ஆசிட் வீசுவதாக மிரட்டுகிறார்கள். நான் பகிர்ந்துள்ள ஸ்கிரீன்ஷாட்டுக்கு ஒரு எக்ஸாம்பில் தான், எனக்கு இதுபோல் எக்கச்சக்கமான மிரட்டல்கள் வந்துள்ளன. இது எல்லைமீறிய ஒன்று. தவறான தகவல்களை பரப்புபவர்கள் கவனத்திற்கு நான் சம்பந்தப்பட்ட பக்கங்கள் மீதும் அதன் அட்மின்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க உள்ளேன் என குறிப்பிட்டு தனக்கு வந்த தரக்குறைவான மெசேஜ்களின் ஸ்கிரீன்ஷாட்டையும் பகிர்ந்துள்ளார் அர்ச்சனா.