இசையமைப்பாளர் இளையராஜா இதுவரை ஆயிரத்துக்கும் அதிகமான படங்களுக்கு இசையமைத்துள்ளார். 7 ஆயிரத்துக்கும் அதிகமான பாடல்களை தந்துள்ளார். இப்போதும் இசையமைத்து வருகிறார். 5 தேசிய விருது, பல மாநில அரசு விருது, பத்மவிபூஷண் விருதை பெற்றவர், சிம்பொனியை உருவாக்கி உள்ளார். இந்நிலையில், அவர் இசையில், இயக்குனர், ஒளிப்பதிவாளர் தங்கர்பச்சான் மகன் விஜித்பச்சான் ஹீரோவாக நடிக்கும் ‘பேரன்பும் பெருங்கோபமும்’ பட பாடல்கள் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இதில் ‘நாம் தமிழர் கட்சி’ சீமான், இயக்குனர் கரு.பழனியப்பன், நடிகை தேவயானி உட்பட பலர் கலந்துகொண்டனர். அதில் இளையராஜாவுக்கு பாரத ரத்னா விருது கொடுக்க வேண்டும் என்று சீமான் வலியுறுத்தியுள்ளார்.
விழாவில் சீமான் பேசியது ‘‘மாதவனை வைத்து நான் இயக்கிய தம்பி பட தலைப்பில், இணை தலைப்பாக பேரன்பும் பெருங்கோபமும் கொண்டவன்’ என்ற வாசகம் இருந்தது.அதை தங்கர்பச்சான் மகன் பயன்படுத்தியது மகிழ்ச்சி. கதைக்கும், தலைப்பிற்கும் நிறைய தொடர்பு இருக்கிறது. தங்கர்பச்சானும் நானும் பல ஆண்டுகால நண்பர்கள். அவர் அழைத்து இருந்தால் கூட இந்த விழாவுக்கு வந்து இருக்கமாட்டேன். விஜி்த்துக்காக வந்தேன். என்னுடன் பல ஆண்டுகள் இருந்த சிவபிரகாஷ் இந்த படத்தின் இயக்குனர். இந்த தலைப்பிற்கு ஒவ்வொருத்தரும் ஒரு விளக்கம் சொன்னார்கள். பெருங்கோபத்தின் பிறப்பிடம் பேரன்புதான். இரண்டிற்கும் தொடர்பு உண்டு. இப்படிப்பட்ட படத்தை தயாரித்துள்ள ஜெயகிருஷ்ணனுக்கு வாழ்த்துகள். பாலுமகேந்திரா பயிற்சி கல்லுாரியில் படித்தவர் இந்த பட இயக்குனர் சிவபிரகாஷ். பாரதிராஜா, பாலுமகேந்திரா, மகேந்திரன் படங்களில் தேவையற்ற காட்சிகள் இருக்காது. இந்த பட ஹீரோயின் ஷாலி அருமையாக நடித்து இருக்கிறார்.
இந்த விழாவில் பேசிய இயக்குனர் எஸ்.ஏ.சி, தனது மகனை ஹீரோவாக்க பலரிடம் அணுகினேன். ஆனால், யாரும் படம் இயக்க முன் வரலை என்று வருத்தப்பட்டார். பின்னர், அவரே தயாரித்து, இயக்கி, தனது மகனை உருவாக்கினார். இந்த பட ஹீரோ விஜித் தந்தை தங்கர்பச்சான் ‘அழகி’ படத்தை முதலில் இயக்கினார். அந்த படத்தை பார்த்துவிட்டு நான் பாராட்டினேன். ஆனால், தயாரிப்பாளர் உட்பட பலருக்கும் படம் ஹிட்டாகும் என நம்பிக்கை இல்லை. கடைசியில் நான் சொன்ன மாதிரி. படம் ஹிட்
இந்த படத்துக்கு இசையமைத்துள்ள இளையராஜா பற்றி சொல்லிக்கொண்டே போகலாம். அவரை இசைஞானி என்பார்கள். நான் அவரை இறைவன் என்பேன். இறைவனிடம் என்ன வேண்டுமானாலும் கேட்கலாம். அந்த மாதிரி என்ன கேட்டாலும், எந்த பின்னணியில் கேட்டாலும் அந்த கொடுக்கிறவர் இளையராஜா. தளபதி, நாயகன் படங்களில் அவர் கொடுத்த இசை, பாடல்கள் அவ்வளவு வித்தியாசம். அவருக்கு பாரதரத்னா கொடுக்கப்பட வேண்டும் என்பதில் மாற்று கருத்து இல்லை. நான் அவருடன் முதல் படத்தில் பணியாற்றி நினைத்தேன்.அது நடக்கவில்லை. மணிவண்ணனிடம் உதவியாளராக பணியாற்றபோது அவரை பார்க்க சென்றேன். அப்போது என்னை அவர் புர டக் ஷன் மானேஜர் என நினைத்து இருக்கிறார்.