சில மாதங்களாக நட்சத்திர வீட்டுக் கல்யாணங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன. அர்ஜூன் மகள் ஐஸ்வர்யா – தம்பிராமையா மகன் உமாபதிக்கும் சில நாட்களுக்கு முன்பு திருமணம் நடந்து முடிந்தது. தமிழ் சினிமாவில் 1984ம் ஆண்டில் நன்றி என்ற படத்தில் அறிமுகமாகி தமிழ் ரசிகர்கள் மத்தியில் நெருக்கமான அன்பில் கலந்தவர் அர்ஜுன். தன்னைப் போலவே மகள்களை சினிமாவில் அறிமுகம் செய்யாமல் அவர்கள் போக்கிலேயே விட்டார். இதில் மூத்த மகள் ஐஸ்வர்யா சினிமாவில் சில படங்களில் நடித்தார். ஆனால் அவரது ஆசைப்படி பெரிய இடத்தை அடைய முடியவில்லை.
இந்த நிலையில்தான் தனியார் தொலைக்காட்சி நடத்திய நிகழ்ச்சியில் அறிமுகமான உமாபதியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பிரமாண்டமாக நடந்த இந்த விழாவில் திரையுலகமே திரண்டு வந்தது. இந்த நிலையில்தான் அர்ஜூன் அடுத்த முகூர்த்தத்திற்கு தயாராகி வருவதாக கூறப்படுகிறது. அர்ஜூனின் இளைய மகள் அஞ்சனாவுக்கும் திருமணம் நடக்க இருப்பதாக கூறப்படுகிறது.
திடீர் பேச்சு எழுவதற்கு காரணம் அஞ்சனா சமீபத்தில் வெளியிட்ட புகைப்படம்தான். தனது உறவினர் ஒருவரின் திருமணத்திற்கு சென்ற அஞ்சனா அங்கு எடுக்கபப்ட்ட செல்பி போட்டோவைத்தான் பகிர்ந்திருந்தார். அதில் அவரது பாட்டியும் அவர் பக்கத்தில் ஒரு வாலிபரும் நின்றிருந்தார்கள். இது இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அஞ்சனா திருமணம் செய்து கொள்ளப் போகும் மாப்பிள்ளை இவர்தான் என்று தீயை பற்ற வைத்தார்கள் ரசிகர்கள். குடும்பத்தினர் சார்பாக அவரை அர்ஜுனுக்கு அறிமுகம் செய்து வைக்கவே அந்த செல்பி எடுக்கபப்ட்டது என்று சொல்லப்படுகிறது. நல்ல காரியம் சீக்கிரம் நடந்தால் சரி என்று ரசிகர்கள் இப்போதே வாழ்த்த ஆரம்பித்திருக்கிறார்கள். இந்த மாப்பிள்ளை அமெரிக்காகாரர். அங்கே பெரும் பணக்காரர். ஆறு வருடங்களாக காதலிக்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது.
அஞ்சனா அர்ஜுன் வீட்டிலேயே வித்தியாசமாக வளர்ந்தப்பெண். அப்பா சினிமா ஹீரோ பெரிய தயாரிப்பாளர் என்றாலும் தானும் சினிமாவில்தான் வர வேண்டும் என்ற பிடிவாதமும் ஆசையும் இல்லாமல் தனக்குப் பிடித்த கைப்பைகள் விற்பனை நிறுவனத்தில் ஈடுபட ஆசைப்பட்டார். அதன்படி ஐதராபாத்தில் தோல் பைகள் அலங்காரப் பொருட்கள் என்று பல வகையான மாடர்ன் ஐட்டங்களை செய்து அதை வியாபாரம் செய்து வருகிறார். இணையத்தின் வழியாகவும், சென்னையிலும் இதற்கான ஷோ ரூம்களை வைத்து நடத்தி வருகிறார் அஞ்சனா. மகள் தனியாக செய்யும் இந்த வியாபாரத்திற்கு அப்பா அர்ஜூன் பெரிய உதவியாக இருக்கிறார். இப்போது அவரின் காதலுக்கும் சம்மதம் தெரிவித்திருப்பதாக தெரிகிறது.