மது, சிகரெட், போதைப் பொருட்கள் என்று சில விஷயங்கள் நம்மை அடிமைப்படுத்துகின்றன. இந்தப் பட்டியலில் சமீபத்தில் சேர்ந்துள்ள மற்றொரு விஷயம் இண்டர்நெட். இதற்கு அடிமையானால், நமக்குத் தெரியாமலேயே நம் நேரத்தை இணையம் கவர்ந்துகொள்கிறது. கல்வி, வேலை போன்றவற்றில் தொய்வு ஏற்பட்டு நம் வாழ்க்கை வீணாகி விடுகிறது.
உண்மையிலேயே நீங்கள் இணையத்துக்கு அடிமையாகி வருகிறீர்களா என்பதை தெரிந்துகொள்ள கீழே கேட்கப்பட்டுள்ள கேள்விகளுக்கு பதில் சொல்லுங்கள்.
இணையதள வசதிகள் இல்லாவிட்டாலோ, சமூக வலைதளங்களைப் பார்க்க செல்போன், மடிகணினி போன்ற வசதிகள் இல்லாவிட்டாலோ வருத்தம் அல்லது பதற்றம் அடைவீர்களா?
1. இல்லை
2. எப்போதாவது
3. அடிக்கடி
4. எப்போதும்
இணையதள வசதியை பயன்படுத்தும்போது உங்களுக்கு நேரம் போவதே தெரியாதா?
1. இல்லை
2. எப்போதாவது
3. அடிக்கடி
4. எப்போதும்
தினந்தோறும் இணையதள வசதியை பயன்படுத்தும் நேரத்தின் அளவு முன்பு இருந்ததைவிட அதிகரித்து வருகிறதா?
1. இல்லை
2. எப்போதாவது
3. அடிக்கடி
4. எப்போதும்
செல்போனை தொடர்ந்து பயன்படுத்துவதை உங்களால் நிறுத்த முடியவில்லையா?
1. இல்லை
2. எப்போதாவது
3. அடிக்கடி
4. எப்போதும்
படிக்கும்போதோ, வேலையை செய்யும் நேரத்திலோ செல்போனில் தேவையில்லாமல் அதிக நேரத்தை செலவிடுகிறீர்களா?
1. இல்லை
2. எப்போதாவது
3. அடிக்கடி
4. எப்போதும்
செல்போனை அதிக நேரம் பயன்படுத்துவதாக யாராவது குற்றம்சாட்டினால் அவர்கள் மீது கோபம் வருகிறதா?
1. இல்லை
2. எப்போதாவது
3. அடிக்கடி
4. எப்போதும்
காலையில் எழுந்தவுடன் இணையத்தைப் பார்ப்பது, சமூக வலைதளங்களை பார்ப்பது, வீடியோ கேம்ஸ் ஆடுவது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுகிறீர்களா?
1. இல்லை
2. எப்போதாவது
3. அடிக்கடி
4. எப்போதும்
செல்போனை பயன்படுத்துவதால் நீங்கள் தூங்கச் செல்லும் நேரம் தாமதமாகிறதா?
1. இல்லை
2. எப்போதாவது
3. அடிக்கடி
4. எப்போதும்
செல்போனை பயன்படுத்துவதால் உங்கள் கல்வி மற்றும் வேலை பாதிக்கப்படுகிறதா?
1. இல்லை
2. எப்போதாவது
3. அடிக்கடி
4. எப்போதும்
குடும்ப உறுப்பினர்களிடம் பேசுவதைவிட செல்போனில் அதிக நேரத்தை செலவிட விரும்புகிறீர்களா?
1. இல்லை
2. எப்போதாவது
3. அடிக்கடி
4. எப்போதும்
இந்தக் கேள்விகளுக்கு இல்லை என்ற பதிலுக்கு பூஜ்யம் மதிப்பெண், எப்போதாவது என்ற பதிலுக்கு 1 மதிப்பெண், அடிக்கடி என்ற பதிலுக்கு 2 மதிப்பெண், எப்போதும் என்ற பதிலுக்கு 3 மதிப்பெண்.
உங்கள் விடைகளை வைத்து மதிப்பெண்களை கூட்டிப் பாருங்கள்.
- மதிப்பெண் 10-க்குள் இருந்தால் நீங்கள் இணையத்துக்கு அடிமை ஆகவில்லை என்று அர்த்தம்.
- 11-ல் இருந்து 20-க்குள் இருந்தால் ஓரளவுக்கு அடிமை ஆகியிருக்கிறீர்கள் என்று அர்த்தம்.
- 21-ல் இருந்து 30-க்குள் மதிப்பெண்களை எடுத்திருந்தால் முழுவதுமாக அடிமை ஆகியிருக்கிறீர்கள் என்று அர்த்தம்.
மதிப்பெண்களைப் போட்டுப் பார்த்து நாம் இண்டர்நெட்டுக்கு ரொம்பவே அடிமையாகிக் கிடக்கிறோம் என்று கவலைப்படுகிறீர்களா?
நீங்கள் மட்டுமல்ல உங்களைப் போல் பலருக்கு இந்த நிலைதான் என்று சமீபத்தில் நடத்திய ஆய்வு ஒன்றின் முடிவு தெரிவிக்கிறது. 1,367 பேரிடம் ஓமந்தூரார் மருத்துவக் கல்லூரியைச் சேர்ந்த ஆய்வாளர்கள் நடத்திய ஆய்வில் 39 சதவீதம் பேர் இணையதளத்துக்கு அடிமை ஆகி இருப்பதாக தெரியவந்துள்ளது. இந்த 39 சதவீதம் பேரில் 9 சதவீதம் பேர் முழுமையாகவும், 30 சதவீதம் பேர் ஓரளவும் இணையத்துக்கு அடிமையாகி இருப்பதாக தெரியவந்துள்ளது.இதில் பலரும் யூடியூப் மற்றும் வாட்ஸ் அப் இணையதளத்துக்கு அடிமையாகி இருப்பதாக இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.
இப்படி இணையதளத்துக்கு அடிமையாகி இருப்பவர்களை அதிலிருந்து மீட்பதற்கான மறுவாழ்வு மையம் ஒன்று சென்னையில் உள்ள ஓமந்தூரார் மருத்துவமனையில் தொடங்கப்பட்டுள்ளது.
இந்த மறுவாழ்வு மையம் தொடர்பாக இம்மருத்துவமனையில் மனநலத் துறை தலைவர் மலர் மோசஸ் கூறும்போது, “கொரோனா காலத்துக்கு பிறகு ஆன்லைனில் படிப்பதும், வேலை பார்ப்பதும் தொடங்கிய பிறகுதான் இணையத்துக்கு அடிமையாகும் வழக்கம் மக்களிடையே அதிகரித்துள்ளது. அதிலும் சிறு குழந்தைகளிடையே இது தீவிரமாக பரவி வருகிறது. அப்படி இணையதளத்துக்கு தீவிரமாக அடிமையானவர்களை மீட்பதற்காக இந்த மையம் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் இயங்கி வருகிறது.