No menu items!

கமலா ஹாரிஸுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் ஆதரவு!

கமலா ஹாரிஸுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் ஆதரவு!

அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் கமலா ஹாரிஸுக்கு ஆதரவாக ஏ.ஆர்.ரஹ்மான் அரை மணி நேர இசை நிகழ்ழ்ச்சி ஒன்றை நடத்திக் கொடுத்துள்ளார்.

அமெரிக்க அதிபர் தேர்தல் வருகிற நவம்பர் மாதம் நடைபெற உள்ளது. இதில் ஜனநாயக கட்சி சார்பில் தற்போதைய துணை அதிபரும், இந்திய வம்சாவழியை சேர்ந்தவருமான கமலா ஹாரிஸ் போட்டியிடுகிறார். குடியரசுக் கட்சி சார்பில் அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் போட்டியிடுகிறார்.

அதிபர் தேர்தலுக்காக இரு தலைவர்களும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இதில் கமலா ஹாரிஸ் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் என்பதால் இந்தியர்களிடையே அவருக்கு ஆதரவு அதிகமாக உள்ளது. அவருக்கு ஆதரவாக அமெரிக்காவில் இருக்கும் இந்தியர்கள் பல்வேறு இடங்களில் பிரச்சார நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார்கள்.

உலகளவில் பிரபலங்களாக உள்ள பல்வேறு நபர்கள் கமலா ஹாரிஸ் மற்றும் டோனால்ட் டிரம்ப் ஆகியோரில் ஒருவருக்கு தங்களின் ஆதரவை தெரிவித்து வருகின்றனர். இச்சூழலில் அமெரிக்க அதிபர் தேர்தல் வேட்பாளராக கமலா ஹாரிஸ் தேர்வு செய்யப்பட்டதைக் கொண்டாடும் விழாவில், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இன்று முன்கூட்டியே பதிவு செய்த இசை நிகழ்ச்சி ஒன்றை ஞாயிற்றுக்கிழமை இரவு காணொலியில் நடத்தியுள்ளார்.

ஜெய் ஹோ, சிங்கப்பெண்ணே உள்ளிட்ட பல்வேறு பாடல்களை ஏ.ஆர்.ரஹ்மான் இந்த நிகழ்ச்சியில் பாடியிருக்கிறார். சுமார் அரை மணி நேரம் கொண்ட இந்த நிகழ்ச்சிக்கு ஏஏபிஐ (AAPI Victory Fund) என்ற அமைப்பு ஏற்பாடு செய்திர்ருந்தது. இந்த அமைப்பானது கமலா ஹாரிசின் பிரச்சாரத்துக்கு நிதி திரட்டுவது, வாக்காளர்களை ஈர்க்க நிகழ்ச்சிகளை நடத்துவது போன்ற பணிகளை செய்து வருகிறது.

கமலா ஹாரிஸுக்கு ஆதரவாக தெற்காசிய மற்றும் இந்திய வாக்காளர்களை கவரும் பொருட்டு ஏ.ஆர்.ரகுமானை இந்த அமைப்பு ஒப்பந்தம் செய்துள்ளது. ஏ.ஆர்.ரகுமானும் அந்த அமைப்பு கேட்டபடி 30 நிமிட பிரச்சார பாடலை உருவாக்கி கொடுத்துள்ளார். அது நேற்று இரவு காணொலியில் ஒளிபரப்பாகி உள்ளது. இந்த இசை நிகழ்ச்சிக்கு நடுவில் கமலா ஹாரிஸின் வேட்பு மனு தாக்கல், கமலா ஹாரிஸின் வாக்குறுதிகள் மற்றும் அமெரிக்கர்களுக்கு அவர் ஆற்றிய பணிகள் போன்றவை இடையிடையே காட்டப்பட்டன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...