பிரபல பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சன் தனது 82 வயதிலும் தொடர்ந்து நடித்து வருகிறார். தமிழில் ரஜினியின் ‘வேட்டையன்’ படத்தில் நடித்திருந்தார்.
சினிமா மற்றும் விளம்பர படங்களில் நடித்து வரும் அவர் சின்னத்திரையில் ‘கோன் பனேகா குரோர்பதி’ நிகழ்ச்சியையும் நடத்தி வருகிறார். இவர் 2024-25-ம் நிதியாண்டில் ரூ.350 கோடியை வருமானமாகப் பெற்றுள்ளார். இதற்காக அவர் ரூ.120 கோடியை அரசுக்கு வரியாக செலுத்தி இருக்கிறார். இதன் மூலம் இந்த வருடம் அதிக வருமான வரி செலுத்திய பிரபலமாக அமிதாப் பச்சன் இருக்கிறார்.