No menu items!

இந்தியாவை புகழ்ந்த அமெரிக்க பெண் கிறிஸ்டன் பிஷ்ஷர்

இந்தியாவை புகழ்ந்த அமெரிக்க பெண் கிறிஸ்டன் பிஷ்ஷர்

இந்தியாவில் வசித்து வரும் அமெரிக்கப் பெண் ஒருவர் மற்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது 10 விஷயங்களில் இந்தியா மிகச் சிறப்பாக இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். “இந்தியாவில் பெஸ்ட்டாக இருக்கும் விஷயங்கள்” என்ற தலைப்பில் இது தொடர்பாக வீடியோ ஒன்றை இந்தியாவில் வாழும் அமெரிக்கப் பெண்ணான கிறிஸ்டன் பிஷ்ஷர் தனது சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார். அது இணையத்தில் டிரெண்டாகி வருகிரது.

கடந்த சில ஆண்டுகளாகவே குருகிராம் பகுதியில் வசித்து வரும் அமெரிக்கப் பெண் கிறிஸ்டின் பிஷ்ஷர், இந்தியாவின் கலாச்சாரம், உள்கட்டமைப்பை பார்த்து வியந்து அவ்வப்போது இதுபோன்ற வீடியோக்களை பகிர்ந்து வருகிறார். அதன்படி அவர் இப்போது மொத்தம் 10 விஷயங்களில் இந்தியா மற்ற நாடுகளைக் காட்டிலும் சிறப்பாகச் செயல்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பான அவரது பதிவை நாம் பார்க்கலாம்.

குறைந்த விலையில் மருத்துவச் சிகிச்சை

இந்தியாவில் மருத்துவச் செலவுகள் குறைவாக இருப்பதாக ஃபிஷர் குறிப்பிடுகிறார். மேற்கத்திய நாடுகளில் மருத்துவச் செலவுகளுடன் ஒப்பிடும்போது இந்தியாவில் குறைவாக இருப்பது இந்தியாவுக்குப் பெரிய பலம் என்று குறிப்பிடுகிறார். இது தொடர்பாக அவர் கூறுகையில், “இந்தியாவில் மருத்துவச் செலவுகள் கணிசமாகக் குறைவாக உள்ளன.. இதனால் பரவலாக அனைவராலும் மருத்துவச் சிகிச்சை அணுகக்கூடியதாக இருக்கிறது” எனப் பதிவிட்டுள்ளார்.

பொதுப் போக்குவரத்து

அடுத்து பொதுப் போக்குவரத்து தொடர்பாக அவர், “பல இந்திய நகரங்களில், பொதுப் போக்குவரத்து மிகவும் செலவு குறைந்ததாகவும் பரவலாகவும் உள்ளது. குறிப்பாக இந்தியாவில் ரயில் நெட்வொர்க் மிகவும் விரிவானதாக இருக்கிறது. இதனால் நாடு முழுக்க உள்ள மக்கள் குறைந்த செலவில் ரயில் பயணத்தை மேற்கொள்ள முடிகிறது. இது தவிரப் பேருந்துகள், ஆட்டோக்கள் மற்றும் மெட்ரோ ரயில் கூட குறைந்த செலவிலும் அணுகக்கூடிய வகையிலும் இருக்கிறது.

உணவு

இந்தியா அதன் சுவையான மற்றும் பன்முகத்தன்மை கொண்ட உணவுக்குப் பிரபலமானது. இந்தியாவில் உணவு சுவையானது மட்டுமல்ல, நம்பமுடியாத அளவிற்குக் குறைந்த விலையிலும் கிடைக்கும். நீங்கள் யோசிக்காத அளவுக்கு சுவையான பல உணவுகள் இந்தியாவில் கிடைக்கும்.

குடும்ப பிணைப்புகள், சமூகமாக இருப்பது, அண்டை வீட்டாருடன் இணக்கமாக இருப்பது ஆகியவற்றுக்கு இந்தியக் கலாச்சாரம் அதிக முக்கியத்துவம் அளிக்கிறது. பெரும்பாலும் குடும்பங்கள் ஒன்றாக வாழ்கின்றன.. இது பொருளாதார உதவி மட்டுமின்றி, எமோஷ்னல் சப்போர்ட்டையும் வழங்குகிறது

வீணாகாது வளம்

இந்தியாவில் பலர் சிக்கனம், நிலையான வளர்ச்சி ஆகியவற்றில் மிகத் தீவிரமான நம்பிக்கை கொண்டுள்ளனர். அவர்கள் பல்வேறு பொருட்களையும் தொடர்ந்து பயன்படுத்துகிறார்கள்.. மறுசுழற்சி செய்கிறார்கள் மற்றும் ரிபேர் செய்து மீண்டும் பயன்படுத்துகிறார்கள். இதனால் ஒரு பொருள் ஈஸியாக வீணாகாது.

இந்தியர்களிடையே விடாமுயற்சி அதிகம் இருக்கும். எப்போதும் எந்தவொரு முயற்சியையும் சீக்கிரம் விட்டுக் கொடுக்க மாட்டார்கள். இந்தியாவில் மக்கள் பெரும்பாலும் எந்தவொரு சூழலுக்கும் ஈஸியாக தகவமைத்துக் கொள்வார்கள்.. கடினமாக உழைக்கத் தயாராகவும் உள்ளனர்.

கொண்டாட்டங்கள் கொண்டாட்டங்கள்

இந்தியா வளமான கலாச்சாரத்தைக் கொண்டிருப்பதால்.. இங்கு மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடப்படும் பல பண்டிகைகள் உள்ளன. இந்த விழாக்கள் மகிழ்ச்சியை மட்டுமின்றி சமூகத்தில் நாமும் ஒரு அங்கம் என்ற உணர்வைத் தருகிறது.

குறைந்த செலவில் கல்வி

பல்கலைக்கழகங்கள் மற்றும் தொழில்முறை பள்ளிகளில் குறைந்த செலவில் படிப்பைப் படிக்க முடியும்.. உலகின் மற்ற நிறுவனங்களுடன் ஒப்பிடும்போது இந்தியாவின் மதிப்புமிக்க நிறுவனங்கள் கூட குறைந்த செலவில் தரமான கல்வியை வழங்குகின்றன.

லேபர் திறன் லேபர் திறன்

இந்தியாவின் தொழிலாளர் சந்தை என்பது மாறி வரும் சூழலுக்கு ஏற்ப தன்னை தகவமைத்துக் கொள்கிறது. இங்கு அனைத்துத் திறன் லெவலிலும் உங்களுக்கு ஊழியர்கள் கிடைப்பார்கள். இது இந்தியாவின் வளர்ந்து வரும் அவுட்சோர்சிங் துறைக்கு முக்கிய காரணமாக இருக்கிறது.

உள்ளூர் பொருட்கள்

கிராமப்புறங்களில், பல இந்தியர்கள் விவசாயத்தைச் செய்து வருகிறார்கள். அவர்கள் இயற்கையான முறையில் காய்கறி, பழங்களை வளர்க்கிறார்கள். இதன் மூலம் பல நகரங்களில் உள்ளூர் பிஸ்னஸ் ஹப்கள் இருக்கின்றன” என்று பதிவிட்டுள்ளார்.

அவரது இந்த பதிவு இணையத்தில் இப்போது டிரெண்டாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...