நடிகர் அஜித்குமார் துபாயில் நடைப்பெற்ற 24H கார் ரேஸில் கலந்து கொண்டார். ஆரம்பத்தில் இவரது கார் பிரேக் கோளாறு காரணத்தால் பல்வேறு விபத்துகளை சந்தித்தது. இந்த நிலையில், அவர் அப்போட்டியில் இருந்து விலகுவதாக கூறி, 991 பிரிவில் கலந்து கொண்டார். நேற்று நடைப்பெற்ற இந்த ரேஸில் அவர் 3ஆம் இடத்தை பெற்றார்.
இதில், இந்திய கொடியுடன் அவர் போஸ் கொடுத்த வீடியோக்கள் மற்றும் போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி வந்தன. இதையடுத்து, நாட்டிற்கே பெருமை சேர்க்கும் வகையில், அஜித் குமார் பெற்றிருக்கும் வெற்றியை திரை பிரபலங்களில் இருந்து அரசியல் பிரபலங்கள் வரை பலர் பாராட்டி பேசி வருகின்றனர்.
அப்போது மிகவும் கண்கலங்கிய நிலையில், உணர்ச்சிவசப்பட்ட நிலையில் இருந்தார் அஜித் குமார். இதுவரை அஜித் குமாரின் தனிப்பட்ட பக்கத்தை ரசிகர்கள் பார்த்ததில்லை. முதல் முறையாக அவர் ஒரு வாலிபரை போல இந்த கார் பந்தய வெற்றியை துள்ளி குதித்துக் கொண்டாடியதையும், உணர்ச்சிவசப்பட்டு கண் கலங்கியதையும் பார்த்து ரசிகர்களும் நெகிழ்ச்சி அடைந்தனர்.
அஜித் குமார் திரையுலகில் நடிக்க வந்ததற்கே பைக் ரேஸில் பங்கேற்க வேண்டும், அதற்கு பணம் வேண்டும் என்பதால்தான். இது திரையுலகில் அனைவரும் அறிந்த விஷயம் தான். பின்னர் அவர் கார் பந்தயத்திற்கு மாறினார். சில ஆண்டுகள் கார் பந்தயத்திலும் பங்கேற்றார். சில விபத்துக்கள் ஏற்பட்டதால் அவரால் தொடர்ந்து கார் பந்தயங்களில் பங்கேற்க முடியவில்லை.
இடையே அவர் திரையுலகில் கவனம் செலுத்தி தீவிரமாக நடித்து வந்தார். தற்போது 53 வயதாகி விட்ட நிலையில் ஒரு கார் பந்தய அணியை உருவாக்கி இருக்கிறார். இனி தொடர்ந்து அந்த அணியுடன் கார் பந்தயங்களில் பங்கேற்க இருப்பதாகவும் அறிவித்தார். அந்த அணி முதல் முறையாக துபாயில் நடைபெற்ற 24 மணிநேர கார் பந்தயத்தில் பங்கேற்றது.
அதில் 922 போர்ஷே பிரிவில் அவரது அணி மூன்றாவது இடத்தை பிடித்தது. தனது 53வது வயதில் தனது கார் பந்தய கனவு வெற்றி பெற்றதை அடித்து அஜித் குமார் உருக்கமாக பேசி இருந்தார். தனது குடும்பத்தினர் நண்பர்கள் மற்றும் கார் பந்தய அணியினருக்கு அவர் நன்றிகளை தெரிவித்தார்.