No menu items!

பயோபிக்கில் பாமக நிறுவனர் ராமதாஸாக நடிகர் ஆரி

பயோபிக்கில் பாமக நிறுவனர் ராமதாஸாக நடிகர் ஆரி

பாமக நிறுவனர் ராமதாஸின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக சேரன் இயக்கத்தில் உருவாகிறது.

பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் வாழ்க்கை வரலாறு படமாகிறது. இந்தப் படத்தினை ஜி.கே.தமிழ்குமரன் தயாரிக்க சேரன் இயக்கவுள்ளார். இதன் ஒளிப்பதிவாளராக ஏகாம்பரம் பணிபுரியவுள்ளார். இந்த பயோபிக்கில் ராமதாஸாக நடிகர் ஆரி ஒப்பந்தமாகி இருக்கிறார். அவரை வைத்து எடுக்கப்பட்ட புகைப்படங்களை வைத்து போஸ்டர்களை உருவாக்கி வெளியிட்டுள்ளது படக்குழு.

இன்று ராமதாஸின் பிறந்த நாளாகும். இதனை முன்னிட்டு அவரது வாழ்க்கை வரலாறு குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு அரசியல் தரப்பினரும், திரையுலகினரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். ‘அய்யா’ எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் போஸ்டர்களில் ‘இன விடுதலைக்கான போராட்டத்தின் வரலாறு’ என்ற வாசகமும் இடம்பெற்றுள்ளது.

பாமக கட்சியின் நிறுவனம் ராமதாஸ். அவரது மகன் அன்புமணி ராமதாஸ் தலைவராக இருக்கிறார். சமீப காலமாக அப்பா – மகன் இருவருக்கும் இடையே கடும் உரசல் ஏற்பட்டு இருக்கிறது. அப்பா ஆதரவாளர்களை மகன் நீக்குவதும், மகன் ஆதரவாளர்களை அப்பா நீக்குவதும் நடைபெற்று வருகிறது.

இந்தத் தருணத்தில் ராமதாஸின் வாழ்க்கை வரலாறு படமாக உருவாவது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...