தமிழ் சினிமாவில் தயாரிப்பாளர்கள் மத்தியில் நேற்று திடீர் பரபரப்பு . முன்னணி நடிகர்கள் கமல்ஹாசன், சிம்பு, தனுஷ் ஆகியோர் மீது தயாரிப்பாளர்கள் சங்கம் ரெட் போட்டு நடவடிக்கை எடுத்திருப்பாதாக தீயாய் செய்திகள் பரவியது. இது எதனால் இப்படி நடப்பது சாத்தியம் தானா என்பது பற்றி விசாரித்தோம்.
சிம்புவுக்கும் தயாரிப்பாளர்கள் சிலருக்கும் சம்பளம் கொடுக்கல் வாங்கல் சிக்கல் தொடர்ந்து கொண்டிருக்கிறது. சிம்பு நடித்த சில படங்கள் வசூல் ரீதியாக ஏற்படுத்திய நஷ்டத்திற்கு சிம்பு தரவேண்டிய பாக்கியும், சில படங்களில் நடிக்கக் கொடுத்த முன்பணத்தை திருப்பிக் கொடுப்பது தொடர்பாகவும் இந்த பஞ்சாயத்து பல வருடங்களாக நடந்து வருகிறது. பலகட்ட சமரச பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு சுமூகமான முடிவில் பணம் கொடுப்பதாகவும், சில படங்களில் நடித்து சரி செய்வதாகவும் பேசி முடிக்கப்பட்டது.
ஆனால் சொல்லியது போல பணம் செட்டில் செய்வதிலும் படம் நடிப்பதிலும் கவனம் செலுத்தாமல் இழுத்தடித்து வந்திருக்கிறார் சிம்பு. இந்த சூழலில் அவருக்கு அடுத்த படமாக ஐசரி கணேஷ் தயாரிக்கும் படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது. இதர்காக ராஜ்குமார் பெரியசாமி இயக்குனநரை கதை சொல்ல அனுப்பி வைத்தார் தயாரிப்பாளர். ஐசரி கணேஷ். அப்படி வந்த ராஜ்குமாரை ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் பக்கம் கொண்டு சேர்த்து விட்டார் சிம்பு.
பிரம்மாண்ட பொருட் செலவில் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனமே அந்தப் படத்தை தயாரிக்க முடிவு செய்திருக்கிறது. அதோடு மணிரதனம் இயகி வரும் தக்ஸ் லைப் திரைப்படத்திலும் சிம்பு நடிக்க முடிவு செய்தார். இதன் ஆரம்பகட்ட பணிகள் இருக்கும் நிலையில்தான் பிரச்சனைகள் வெடிக்கத் தொடங்கியது.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக தக்ஸ் லைப் படத்தில் நடிப்பதற்காக ரெட் ஜெயண்ட் சார்பாக உதயநிதி ஸ்டாலின் சிம்புவை படப்பிடிப்பு தளத்திற்கு அழைத்து சென்று விட்டதாகக் கூறப்படுகிறது.
ஏற்கனவே கமல்ஹாசன் நடித்துக் கொண்டிருக்கும் நிலையில் சிம்புவும் கைகோர்த்துக் கொண்டது தயாரிப்பாளர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது. கமல்ஹாசனும் ஏற்கனவே உத்தமவில்லன் படத்தின் பஞ்சாயத்தில் இருப்பதால் இருவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தயாரிப்பாளர்கள் சிலர் கடுமையாக தங்கள் கருத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். இது தொடர்பாக சங்கத்தில் சில நடவடிக்கைகளை எடுக்க திட்டமிட்ட நிலையில் விஷயம் வெளிசாத்திற்கு வந்து விட்டது.
இதனால் நடிகர் சங்கத்தில் சார்பாக துணை தலைவர் பூச்சி முருகன் ஒரு செய்தி குறிப்பை வெளியிட்டார். அதில் நடிகர்கள் கமல்ஹாசன், தனுஷ், சிம்பு, விஷால் ஆகியோர் மீது புகார் அளிக்கப்பட்ட நிலையில் அவர்களுக்கு இனி தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் ஒத்துழைப்பு அளிக்காது’
என்று ஊடகங்களில் பரப்பப்படும் செய்தி என்னை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.
ஏராளமான ஊடக நண்பர்களின் வேண்டுகோளுக்கு இணங்க, தென்னிந்திய நடிகர் சங்கத்தின் துணைத் தலைவர் என்ற முறையில், இந்த தவறான செய்திக்கு விளக்கமளிக்க கடமைப்பட்டுள்ளேன்… தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பாக கமல், .தனுஷ், சிம்பு மற்றும் திரு.விஷால் மீது தென்னிந்திய நடிகர் சங்கத்தில் எந்த புகாரும் நிலுவையில் இல்லாத நிலையில், இவ்விதம் அவதூறாக செய்தி பரப்புவதை உடனடியாக நிறுத்த வேண்டும் என தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பாக வலியுறுத்துகிறேன்… மேலும், இது தொடர்பாக விசாரித்ததில், ‘முன்னணி நடிகர்கள் சிலர் மீதான புகார்கள் குறித்து ஆலோசித்தோமே தவிர எந்தவித நடவடிக்கை குறித்தும் முடிவெடுக்கவில்லை’ என்று தயாரிப்பாளர்கள் சங்கம் தரப்பில் உறுதி செய்திருப்பதையும் குறிப்பிட விரும்புகிறேன் என்று குறிப்பிட்டிருக்கிறார்.
திரையுலகம் என்பது ஒருவரை ஒருவர் சார்ந்து இயங்கும் துறை இதில் யாரும் யாரையும் ஏமாற்ற நினைப்பது தங்கள் துறைக்கே அவர்கள் செய்யும் துரோகமாகவே பார்க்கப்படும். பெரிய நடிகர்களுக்கு ஒரு சார்பாகவும், சிறிய நடிகர்களுக்கு ஒரு சார்பாகவும் சங்கத்தின் போக்கும் இல்லாமல் அனைவருக்கும் சம்மாக நடந்து கொள்ள வேண்டும் என்பதுதான் அனைவரின் எதிர்பார்ப்பு.