No menu items!

11 நாய்களுக்கு தமிழகத்தில் தடை! – நாய்கள் லிஸ்ட் இதோ!

11 நாய்களுக்கு தமிழகத்தில் தடை! – நாய்கள் லிஸ்ட் இதோ!

தமிழ்நாட்டில் வெளிநாட்டு இனத்தை சேர்ந்த 11 வகை நாய்களை இனப்பெருக்கம் செய்வதற்கு தடை விதித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் நாய்கள் இனப்பெருக்கம் தொடர்பான கொள்கை ஒன்றை வகுக்கும்படி, கடந்த ஆண்டில் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த்து. அதன் அடிப்படையில், தமிழ்நாடு கால்நடை பராமரிப்பு துறை சார்பாக, நாய் இனப்பெருக்க கொள்கை தொடர்பான வரைவு அறிக்கை கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியிடப்பட்டது. இந்த வரைவு அறிக்கை பல்வேறு நிபுணர்களின் கருத்துகளுக்கு பிறகு தற்போது முழுமை பெற்றுள்ளது. அந்த வகையில், ஐகோர்ட்டு உத்தரவின்படி, தமிழ்நாடு கால்நடை பராமரிப்பு துறை சார்பாக ‘தமிழ்நாடு நாய் இனப்பெருக்க கொள்கை-2024’ நேற்று வெளியிடப்பட்டது.

இது தொடர்பான அரசாணையில் கூறியிருப்பதாவது:

நாய்கள் இனப்பெருக்கம், வணிகம், விற்பனை ஆகியவை பெரியளவிலான வர்த்தகமாக நடைபெறுவதால், ஆயிரக்கணக்கானவர்கள் இந்த தொழிலில் ஈடுபடுகின்றனர். இதன் மூலம் கோடிக்கணக்கான தொகைக்கு விற்பனை நடைபெறுகிறது. மரபு சாரா இனப்பெருக்கம் மூலம் குறைபாடுள்ள நாய்க்குட்டிகள் உற்பத்தி செய்து விற்பனை செய்யப்படுகின்றன.

கட்டுப்பாடற்ற இனப்பெருக்கம் மனித இனத்துக்கும் சிக்கலை ஏற்படுத்துகிறது. இதற்காகவே இந்த கொள்கை வகுக்கப்பட்டுள்ளது. கண்மூடித்தனமான இனப்பெருக்கத்தை தவிர்த்தல், மரபு சார்ந்த பிரச்சினைகளுடன் குட்டிகள் பிறப்பதை தவிர்த்தல், தனித்துவமான பல்லுயிர் பாதுகாப்பு மதிப்புகளுடன் கூடிய நாட்டினங்களை பாதுகாத்தல், வெளிநாடுகளில் இருந்து பரவும் நோய்களில் இருந்து பாதுகாத்தல், இனப்பெருக்கம் நடைபெறும் இடங்களை பதிவு செய்தல், இனப்பெருக்கம் செய்வோர் உரிமம் பெறுதல், நாய்களுக்கு சான்றிதழ் பெறுதல், நாய் இனப்பெருக்க ஏஜென்சிகளை கண்காணித்தல் போன்றவை இந்த கொள்கையில் இடம் பெற்றுள்ளது.

பாசெட் ஹவுண்ட் , பிரஞ்சு புல்டாக் , அலாஸ்கன் மலாமுட் , கீஷொண்ட் , சோ சோ, நியூஃபவுண்ட்லாந்து, நார்வேக்லான் எல்கவுண்ட் , திபெத்திய மாஸ்டிஃப் , சைபீரியன் ஹஸ்கி , செயின்ட் பெர்னார்ட், பக் ஆகிய 11 நாய் இனங்கள் இந்திய தட்பவெப்பம் போன்ற சூழலை தாக்குப்பிடிக்கக் கூடியதாக இல்லை.

எனவே, அதுபோன்ற குளிர் பிரதேச நாய் இனங்களை வளர்ப்பதற்கு கண்டிப்பாக தடை தடைவிதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வளர்க்க உள்ள குறிப்பிட்ட நாய்கள் குறித்த விவரங்களை, தமிழ்நாடு விலங்குகள் நல வாரியத்தில் பதிவு செய்ய வேண்டும். நாய்களின் உடல்நிலை குறித்த சான்றிதழை விலங்குகள் நல வாரியம் வழங்கும். நாய்களுக்கான உரிமையாளர்கள் குறித்த விவரங்கள், விலங்குகள் நல வாரியத்தில் அவ்வப்போது பதிவேற்றம் செய்யப்பட வேண்டும். நாய் வளர்ப்போர் அனைவரும் அதை வளர்க்கும் முறை, உணவு, இனப்பெருக்கம், செயல்பாடு பற்றி தெரிந்திருக்க வேண்டும். அதன் மனம் மற்றும் உடல் நிலை பாதிக்கப்படக் கூடாது என்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும். வளர்ப்பு நாய்களுக்கான உடல் நலனை கால்நடை மருத்துவர் மூலமாக அடிக்கடி சோதித்து பார்க்க வேண்டும்

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...