No menu items!

ரைட் – விமர்சனம்

ரைட் – விமர்சனம்

கல்லூரி இளைஞனான தன் மகன்  காணமல் போன நிலையில், போலீசில் புகார் கொடுக்கச் செல்கிறார்  ஒரு தந்தை  ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர்

பிரதமரின் பந்தோபஸ்துக்கு  ஒரு டீமோடு போய் விட, ஸ்டேஷனில் சப் இன்ஸ்பெக்டர் , பெண் போலீஸ் , ஏட்டு, அந்த ஏட்டுக்கு பொருட்களை திருடிக் கொண்டு வந்து தரும் ஒரு திருடன், லாக்கப்பில் சில கைதிகள் மட்டும் இருகின்றனர் .   புகார் தர வந்த அப்பாவை அசிங்கப்படுத்தி அனுப்புகின்றனர் ஏட்டுவும் சப் இன்ஸ்பெக்டரும்.

 ஒரு ஆள் வந்து லாக்கப்பில் உள்ள கைதிகளை ஏட்டுவின் உதவியோடு மீட்டுக் கொண்டு போகிறான் .

 மகனைக் கண்டு பிடிக்கச் சொல்லி அப்பா தொடர்ந்து வந்து அவமானத்துக்கு ஆளாகிறார்

 இந்த நிலையில் திருட்டில் இருந்து மீட்கப்பட்ட நகைகளை மக்களுக்குக் கொடுக்கும் நிகழ்ச்சி ஸ்டேஷனில் நடக்க, அதோடு சம்மந்தம் இல்லாமல் ஒரு லேப் டாப்பும் சேர்ந்து இருக்கிறது .  எப்படி வந்தது என்பது யாருக்கும் தெரியவில்லை.

 அந்த நேரம் பார்த்து  கல்யாண ஏற்பாட்டுக்காக  லீவில் இருக்கும் பெண் சப் இன்ஸ்பெக்டர் பத்திரிக்கை கொடுக்க வருகிறார் .

 அவர் லேப் டாப்பை இயக்குவது பற்றி ஏட்டுவுக்கு கற்றுக் கொடுக்க,

 ஆன் செய்யப்பட்டதும் தானாக இயங்கும் கம்பியூட்டர் ,வழியே வரும் ஒரு குரல், ஏட்டு  உட்கார்ந்து இருக்கும் இருக்கைக்கு கீழும் , ஸ்டேஷனை சுற்றியும் வெடிகுண்டு  இருக்கிறது . யார் வேண்டுமானலும் உள்ளே வரலாம். ஆனால் வந்தவர் வெளியே போக நினைத்தால் பாம் வெடிக்கும் . எல்லோரும் சாவீர்கள் என்கிறது .

 ஆட்கள் உள்ளே வர, வெளியே ஓடிய ஒருவன் வெடித்து உயிர் ஆபத்துக்குப் போக, எல்லோருக்கும் சீரியஸ்நெஸ் புரிகிறது .

 எல்லோரும் உயிரோடு தப்பிக்க வேண்டும் என்றால் நீதிபதி ஸ்டேஷனுக்கு வந்து விசாரணை செய்ய வேண்டும் என்கிறது  மிரட்டல் குரல்.

நீதிபதி  வர, போலீஸ் ஸ்டேஷனுக்குள் கோர்ட் செட்டப் உருவாகிறது .

அரசியல்வாதிகளுக்கு  துணை போவதற்காக,  போலீசே ஒரு பெண்ணுக்கு அநியாயம் இழைத்த கதையை சொல்லி , அவன் கொண்டு வரப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும் . இல்லை எனில் பாம் வெடிக்கும் என்கிறது மிரட்டல் குரல்  அடுத்து என்ன நடக்கிறது என்பதை திகில் பரவ சொல்லியிருக்கிறார் இயக்குனர் சுப்ரமணியன் ரமேஷ்குமார்.

அருண்பாண்டியன் மகனை பறிகொடுத்து விட்டு தவிக்கும் தந்தையாக உருக வைக்கிறார். அவரை அலட்சியப்படுத்தும் காவல் அதிகாரிகளை எதிர்கொள்ள முடியாமல் திணறும் இடத்தில் நன்றாக ஸ்கோர் பண்ணுகிறார்.

காவல் அதிகாரியாக நட்டி நடராஜ், நீதியரசராக வினோதினி, காவலராக மூணாறு ரமேஷ் ஆகியோர் தங்கள் பங்கை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.

முதல்பாதி முழுவதும் யார் செய்தார்கள் என்ற கேள்வி இருந்து கொண்டே வருவது படத்தின் சஸ்பென்சை அதிகரிக்கிறது.  இடைவேளையும் க்ளைமேஸ் காட்சியும் யாரும் யூகிக்க முடியாத இடம்.

விசாரணைக்காக காவல் நிலையத்தில் நீதிமன்றம் வருவது இதுவரைக்கும் பார்க்காத காட்சி. சிறப்பு.

ஆனால் கதையை பிடித்தவர்கள்  அதற்கான திரைக்கதையை சரிவர நிர்ணயிக்க முடியாமல் போனது படத்தின் பலவீனமாகவே இருக்கிறது.

 ஆனால் பாம் வைப்பைதை ஏதோ மதியம் டிபனில் கேசரி வைப்பது போன்ற சம்பவமாக காட்டியிருப்பது சிரிப்புக்குள்ளாகியிருக்கிறது.  பாம் ஸ்குவாடில் வேலை பார்த்தவரை டிபார்ட்மெண்டில் யாருக்கும் தெரியாமல் போவதும் அபத்தம்.  அதே போல பலி வாங்க சரியான காரணத்தை சரியான முறையில் சொல்லாததும் பலவினம்.  இருந்தாலும் மகள் செண்டிமெண்ட் சரியாக வேலை பார்த்திருக்கிறது.

பாம் வைத்தால் போலீஸ் இலாகா எப்படி டென்சன் ஆகும் என்பதற்கெல்லாம் சரியான டீட்டெயில் இல்லை.

இடைவேளை வரை நட்டி நடராஜ் இரண்டே காட்சிகளில்தான் வருகிறார் ; இவர் பெயரை முதலில் போடுகிறார்களே  என்று ஆச்சர்ய்மாக இருந்தது . நல்ல வேளை இடைவேளைக்குப் பிறகு அதற்கான நியாயம் செய்தார்கள்.

அக்‌ஷரா ரெட்டி  அழகான அதிகாரியாக வந்து படம் முழுவதும் நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். அஜித்துடன் வீரம் படத்தில் நடித்த யுவிணா  நாயகியாக வந்தாலும் அவருக்கு நடிக்க சரியான வாய்ப்புக் கொடுக்கவில்லை.

மூணாறு ரமேஷ், வினோதிநி வைத்யநாதன்,  பெண் போலீசாக வருபவர் , ரோஷன் உதயகுமார் ஆகியோர் சிறப்பாகச் செய்துள்ளார் கள் . பாராட்டுகள். திருடனாக வரும் தங்கதுரை அவ்வப்போது சிரிக்க வைக்கிறார்,.

குணா பால சுப்ர மணியத்தின் இசை , பத்மேஷின் ஒளிப்பதிவு  இன்னும் சிறப்பாக இருந்திருக்கலாம்.

ரைட் – போலாம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...