மருத்துவ துறையில் மட்டுமின்றி, பல்வேறு துறைகளிலும் சிறந்து விளங்கும் ஒன்றாக ஏஐ தொழில்நுட்பம் மேம்பட்டுள்ளதாகவும் எலான் மஸ்க் குறிப்பிட்டுள்ளார்.
உலகம் முழுவதும் ஏஐ தொழில்நுட்பம் வேகமாக வளர்ந்து வருகிறது. எலான் மஸ்க்கின் எக்ஸ் தளத்திலும் குரோக் என்ற செய்யறிவு அம்சம் இடம்பெற்றுள்ளது. தொடர்ந்து அதில் பல மேம்பாடுகளையும் எலான் மஸ்க் செய்து வருகிறார்.
இந்நிலையில், ஏஐ தொழில்நுட்பமான சாட் ஜிபிடி மூலம் புற்றுநோயிலிருந்து மீண்டு வந்த கதையை பெண் ஒருவர் கூறினார். புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நிலையில், மருத்துவர்களின் கருத்துகளுக்கு சவால்விடும் வகையில் சில வழிமுறைகளைக் கூறி புற்றுநோயிலிருந்து மீண்டு வரச் செய்துள்ளதாகவும் குறிப்பிட்டார். இந்த விடியோ இணையத்தில் பரவலாக பகிரப்பட்டது.
மருத்துவர்களுக்கு ஏஐ க்கும் இடையே மறைமுகமான போரின் தொடக்கமாக இது மாறியுள்ளதாக பலர் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.
மருத்துவர்களிடம் செல்வதற்கு முன்பு கூகுளில் சில தகவல்களைத் தேடி நோயிக்கான அறிகுறிகளைக் அறிந்துகொண்டு நோயாளிகள் செல்வதும் அதிகரித்து வருகிறது. இதனை கடைபிடிக்க வேண்டாம் என மருத்துவர்கள் சிலர் கூறுவதும் அதிகரித்து வருகிறது.