மும்பை இந்தியன்ஸுக்கும் சென்னை சூப்பர் கிங்ஸுக்கும் போட்டின்னாலே ‘பேய்க்கும் பேய்க்கும் சண்டை’ ங்கிற காஞ்சனா பட டயலாக்தான் ஞாபகத்துக்கு வரும். 2 டீமுக்கும் இடையில இருக்கற வரலாறு அப்படி. ஐபிஎல்ல 10 டீம் இருந்தாலும் மும்பை இந்தியன்ஸும் சிஎஸ்கேவும் ஒவ்வொரு முறை மோதும்போதும் ஆட்டத்துல அனல் பறக்கும்.
யார்கிட்ட தோத்தாலும் இவங்க கிட்ட மட்டும் தோக்கக் கூடாதுன்னு மும்பை இந்தியன்ஸோட ஆடும்போது சிஎஸ்கே ரசிகர்கள் எதிர்பார்ப்பாங்க. சிஎஸ்கேவோட ஆடும்போது மும்பை இந்தியன்ஸ் ரசிகர்கள் மனநிலையும் இப்படித்தான் இருக்கும்.
ஐபிஎல் தொடரைப் பொறுத்தவரை மும்பை இந்தியன்ஸ் இதுவரைக்கும் 5 முறை கோப்பையை ஜெயிச்சிருக்காங்க. சிஎஸ்கேவும் 5 முறை சாம்பியன் பட்டம் ஜெயிச்சிருக்கு. 2 அணியும் இதுவரைக்கும் 37 தடவை மோதியிருக்கு. இதுல சிஎஸ்கே 17 முறையும், மும்பை இந்தியஸ் 20 முறையும் ஜெயிச்சிருக்கு. இந்தச் சூழல்லதான் நாளைக்கு 8-வது முறையா மோதப் போறாங்க. இதுவரைக்கும் நடந்ததெல்லாம் பழைய கதை. இந்த தடவை புதுசா ஜெயிக்கணும்ங்கிற மனநிலையோடத்தான் 2 டீம்களோட ரசிகர்களும் இருக்காங்க.
ரசிகர்கள் தங்களோட அணி ஜெயிக்கணும்னு ஆசைப்படறது ஓகே… ஆனா டீம்கள் எப்படி இருக்கு? அதைப்பத்தி தெரிஞ்சுக்குவோம்.
சிஎஸ்கே அணியைப் பொறுத்தவரை அதோட பலமே பேட்டிங்தான். தொடக்க வீரர் ருதுராஜ் கெய்க்வாட்ல ஆரம்பிச்சு, கான்வாய், ரச்சின் ரவீந்திரா, சாம் கரண், தீபக் ஹூடா, ஜடேஜா, தோனின்னு போய் கடைசியில 11-வதா இருக்கற அஸ்வின் வரைக்கும் சிஎஸ்கேல எல்லாருமே பேட்ஸ்மேன்தான்.
மும்பை அணியை பொறுத்தவரை ஹர்த்திக் பாண்டியா, ஜஸ்பிரித் பும்ரா இல்லாதது பெரிய பலவீனம். இருந்தாலும் ரோஹித் சர்மா, சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, ஜேக்கப்ஸ்னு இருக்கிற நாலைஞ்சு பேட்ஸ்மேன்களும் அபாயகரமானவங்களா இருக்காங்க. பந்துவீச்சுலயும் அப்படித்தான். ட்ரென்ட் போல்ட், தீபக் சாஹர், டாப்லி, முஜிபுர் ரஹ்மான்னு பல சிறந்த பந்துவீச்சாளர்கள் அந்த அணியில இருக்காங்க. அதனால பேட்டிங்ல கொஞ்சம், பந்துவீச்சுல கொஞ்சம்னு பலமா இருக்காங்க.