No menu items!

கள்ளச்சாராயம் விற்பார்.. ஆனால் குடிப்பழக்கம் இல்லை – யார் இந்த கண்ணுக்குட்டி?

கள்ளச்சாராயம் விற்பார்.. ஆனால் குடிப்பழக்கம் இல்லை – யார் இந்த கண்ணுக்குட்டி?

கள்ளக்குறிச்சியில் நடந்த கள்ளச்சாராய சம்பவத்தில் 50-க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். இந்த சம்பவத்துக்கு முக்கிய காரணமாக கூறப்படும் கண்ணுக்குட்டியை போலீஸார் கைது செய்துள்ளனர். இதைத்தொடர்ந்து யார் இந்த கண்ணுக்குட்டி என்ற கேள்வி மக்களிடையே எழுந்துள்ளது.
கள்ளக்குறிச்சி அருகே உள்ள கருணாபுரம் பகுதியை சேர்ந்தவர்தான் கண்ணுக்குட்டி. இவருக்கு பெற்றோர் வைத்த பெயர் கோவிந்தராஜ். இவர் கருணாபுரம் பகுதியில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக கள்ளச்சாராய விற்பனை செய்து வருகிறார்.

ஆரம்பத்தில் 50 ரூபாய் முதல் 60 ரூபாய் வரை விற்க கூடிய கள்ளச்சாராய பாக்கெட்டுகளை ஆற்றங்கரையோரம் மறைவாக கண்ணுக்குட்டி விற்பனை செய்து வந்துள்ளார். அந்த தொழ்லிலில் பணம் மழை கொட்ட, சொந்தமாக ஒரு சாராயக் கடை திறக்கும் எண்ணம் கண்ணுக்குட்டிக்கு ஏற்பட்டுள்ளது. தனது வீட்டுக்கு அருகிலேயே சிறிய கொட்டகை ஒன்றை அமைத்து அங்கே சாரயக் கடை திறந்திருக்கிறார் கண்ணுக்குட்டி.

இந்த கடையில் விற்பனை அதிகரிக்க, அருகிலேயே இன்னொரு வீட்டை வாடகைக்கு எடுத்து, அதை கள்ளச்சாராய குடோனாக மாற்றியிருக்கிறார். டாஸ்மாக் கடைகளை 12 மணிக்குத்தான் திறப்பார்கள். ஆனால் கண்ணுக்குட்டி அதற்கு முன்பே காலையில் தன் வியாபாரத்தை தொடங்கிவிடுவார். பெரும்பாலும் தினமும் 24 மணிநேரமும் அவரது கடை திறந்திருக்கும் என்று அப்பகுதி மக்கள் கூறுகிறார்கள். இத்தனைக்கும் கள்ளக்குறிச்சி போலீஸ் ஸ்டேஷனில் இருந்து வெறும் 300 மீட்டர் தொலைவில் இருக்க கூடிய சுடுகாட்டு ஓரம் தான் இந்த கள்ளச்சாராய விற்பன நடைபெற்று வந்துள்ளது. கண்ணுக்குட்டியின் சகோதரர் தாமோதரன் மற்றும் மனைவி விஜயா ஆகியோர் அவருக்கு உதவியாக இருந்திருக்கிறார்கள்.
கண்ணுக்குட்டியின் மாமா அங்குள்ள விஏஓ அலுவலகத்தில் உதவியாளராக இருந்துள்ளார். அவரது ஆதரவில், தொடக்கத்தில் கல்வராயன்மலையில் இருந்து கள்ளச்சாராயம் வாங்கி வந்து விற்பனை செய்த கண்ணுக்குட்டி, பின்னர் படிப்படியாக தொழிலை விரிவுபடுத்தி, காவல் துறையினர் மற்றும் அரசியல் கட்சிப் பிரமுகர்களை தனது தொழிலுக்கு பக்கபலமாக வைத்துக் கொண்டு செயல்பட்டுள்ளார்.

கடந்த ஆண்டு விழுப்புரம் மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்து 20-க்கும் மேற்பட்டோர் பலியான சம்பவத்திற்கு பிறகு சில மாதங்கள் கள்ளச்சாராயம் விற்காமல் தன் கடைக்கு லீவ் விட்டிருக்கிறார் கண்ணுகுட்டி. சில மாதங்களிலேயே போலீஸாரை சரிகட்டி மீண்டும் வியாபாரத்தை தொடங்கியிருக்கிறார்.

சுற்று வட்டார கிராமத்தில் நடைபெறும் திருவிழாக்கள், திருமணம், இறப்பு போன்ற நிகழ்வுகளுக்கும் மொத்தமாக கள்ளச்சாராய விற்பனை செய்துள்ளார் கண்ணுக்குட்டி. 25 ஆண்டுகளுக்கும் மேலாக கள்ளச்சாராயம் விற்பனை செய்து வரும் கண்ணுக்குட்டி, தனது சகோதரர் தாமோதரன் மூலம் காவல்துறை நடமாட்டத்தை நோட்டமிட்டவாறு கள்ளச்சாராய விற்பனை செய்து வந்து இருக்கிறார். கண்ணுக்குட்டி மீது ஏற்கனவே 70 க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளதாக கூறப்படுகிறது. 22 முறை கைது செய்யப்பட்டுள்ள கண்ணுக்குட்டி, 2 முறை குண்டர் சட்ட்த்திலும் சிறையில் இருந்திருக்கிறார்.

ஊர் மக்களுக்கெல்லாம் சாராயம் விநியோகிக்கும் கண்ணுக்குடிக்கு குடிப்பழக்கம் கிடையாது. . இதனால் தனது தம்பி மூலமாகவே அவர் மெத்தனாலை கண்ணுக்குட்டி வாங்கி வந்ததாக சிபிசிஐடி போலீசார் தரப்பில் சொல்லப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...