அஜித் ஜோடியாக திரிஷா நடித்த ‘குட்பேட்அக்லி’ படம் வெளியாகி, ஓரளவு வரவேற்பை பெற்று வருகிறது. மகிழ்ச்சியாக இருக்க வேண்டிய இந்த தருணத்தில் தனது இன்ஸ்டா பக்கத்தில் பொங்கியிருக்கிறார் திரிஷா. சிலரை திட்டி தீர்த்து இருக்கிறார். கோழைகள் என வசை பாடியிருக்கிறார். திரிஷாவுக்கு என்னாச்சு? அவரை உசுப்பேற்றியவர்கள் யார்? என்று விசாரித்தோம்.
நேற்று நடிகை திரிஷா ‘‘டாக்சிக்கான மக்களே நீங்கள் எப்படி வாழ்கிறீர்கள்? நிம்மதியாக தூங்குகிறீர்களா? சமூகவலைதளங்களில் இருந்து மற்றவர்கள் குறித்து மோசமான கருத்துக்களை தெரிவிப்பது தினசரி உங்களுக்கு சிறப்பான நாளாக இருக்கிறதா?உங்களையும் உங்களை சுற்றி இருப்பவர்களையும் நினைத்தால் வேதனையாக இருக்கிறது. பெயர் இல்லாத, அடையாளம் இல்லாத நீங்கள் நிச்சயமாக கோழைகள் தான். உங்களுக்கு கடவுளின் அருள் கிடைக்கட்டும்’’ என்று பொங்கியிருக்கிறார். இந்த பதிவு கோலிவுட்டில் வைரலாகி வருகிறது. யாரையும் குறிப்பிடாமல், எது பற்றியும் நேரடியாக சொல்லாமல் அவர் பொங்கியிருப்பது ஏன் என்று கேள்விகள் எழுப்பியுள்ளது.
இது பற்றி விசாரித்தால், குட்பேட் அக்லி குறித்த விமர்சனங்கள்தான் அவரை இப்படி பேச வைத்துள்ளது. அந்த படத்தில் திரிஷா கேரக்டரை பார்த்தவர்கள், அவர் நடிப்பை பார்த்தவர்கள் கடுமையாக விமர்சிக்கிறார்கள். விடாமுயற்சி படத்திலும் திரிஷாவுக்கு நல்ல ரோல் இல்லை. இந்த படத்திலும் இப்படி. வரிசையாக 2 படங்களில் அஜித்துடன் நடித்து இருந்தாலும் அவர் ஸ்கோர் பண்ணவில்லை. அவருக்கு நல்ல சீன்கள், அழகான பாடல்கள் கூட இல்லை. திரிஷா வேஸ்ட். அவர் ஓய்வு பெற வேண்டும் என்ற கிண்டல் அடிக்கிறார்கள்.
மேலும் குட்பேட் அக்லி படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்த சிம்ரனை புகழ்ந்து தள்ளுகிறார்கள். அப்படியே திரிஷாவை கிண்டல் அடிக்கிறார்கள். இது, அவரை பாதித்துள்ளது. பொன்னியின் செல்வனுக்குபின் சில படங்களில் திரிஷா நடித்து இருந்தாலும், பெரியளவில் வெற்றி கொடுக்கவி்ல்லை. கோட் படத்தில் அவர் ஆடிய பாடலும் ஹிட் ஆகவில்லை. வயது காரணமாக அவருக்கான ரோல்கள் குறைகின்றன. முன்னணி ஹீரோக்கள் அவரை ஒதுக்குகிறார்கள். இளம் ஹீரோக்கள் ஆண்டியாக பார்க்கிறார்கள். அதனால், விடாமுயற்சி, குட்பேட்அக்லி படத்தை அவர் ரொம்பவே நம்பி இருந்தார். அந்த படங்களின் ரிசல்ட், அவர் கேரக்டர் டம்மி ஆனதால், விரக்தியில் இப்படி பேசுகிறார்கள். கிட்டத்தட்ட 25 ஆண்டுகளாக, பல மொழிகளில் 65க்கும் அதிகமான படங்களில் நடித்துவிட்டார் திரிஷா. இப்போதும் ஹீரோயினாக நடித்து வருகிறார்.