கனமழை காரணமாக, சென்னைக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் ஏரிகளின் நீர்மட்டம் கணிசமாக உயர்ந்துள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தில் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் நேற்று முதல் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால், புழல், சோழவரம் ஏரிகளுக்கு நீர்வரத்து உயர்ந்துள்ளது.
சென்னை புழால் ஏரிக்கு நேற்று 278 கன அடி நீர் வந்து கொண்டிருந்த நிலையில், இன்று நீர்வரத்து 880 கன அடியாக அதிகரித்துள்ளது.
அதுபோல, சோழவரம் ஏரிக்கும் வினாடிக்கு 122 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. செம்பரம்பாக்கம் ஏரிக்கு, வினாடிக்கு 450 கன அடி நீரும், பூண்டி ஏரிக்கு வினாடிக்கு 420 கன அடி நீரும் வந்து கொண்டிருக்கிறது.
சென்னைக்கு முக்கிய குடிநீா் ஆதாரங்களான, செம்பரம்பாக்கம், பூண்டி, சோழவரம், புழல், கண்ணன்கோட்டை உள்ளிட்ட ஏரிகளின் நீா்இருப்பு ஆகஸ்ட் 22ஆம் தேதி நிலவரப்படி, 7,821 மில்லியன் கன அடியாக இருந்தது. இதேக் காலக்கட்டத்தில் கடந்த ஆண்டு நீர் இருப்பு வெறும் 5,262 மில்லியன் கன அடி என்பது குறிப்பிடத்தக்கது.