No menu items!

வி.கே.டி. பாலன் – பிச்சைக்காரராக தொடங்கி பலகோடி அதிபதியானவர்

வி.கே.டி. பாலன் – பிச்சைக்காரராக தொடங்கி பலகோடி அதிபதியானவர்

டிராவல்ஸ் துறையின் முன்னோடியான வி.கே.டி. பாலன் நேற்று காலமானார்.

ஒருங்கிணைந்த நெல்லை மாவட்டத்தில் திருச்செந்தூரில் பிறந்த வி.கே. தனபாலன் என்ற விகேடி பாலன் தன்னுடைய சிறு வயதிலேயே சென்னைக்கு வந்துவிட்டார். சென்னையின் ஆரம்ப நாட்களில் அயராமல் தொடர்ந்து வேலை தேடி வந்தார். பல இடங்களிலும் வேலைகளுக்காக முயற்சி செய்திருக்கிறார். ஆனால், அவை எதுவும் அவருக்கு கைகொடுக்கவில்லை. இதனால் வேலையில்லாமல், வருமானம் இல்லாமல் கடும் பசியினால் தவித்துள்ளார் பாலன்.

இந்நிலையில், அந்நாட்களில் விசாவுக்காக அமெரிக்க தூதரகத்திற்கு செல்வோருக்காக முன்பாகவே சென்று இடம் பிடித்து கொடுத்து முதலில் சிறிய அளவில் பணம் சம்பாதித்திருக்கிறார். வீடில்லாமல் பசியினால் தவித்து வந்த வி.கே.டி. பாலனின் வாழ்க்கை இந்த இடத்தில்தான் மாற்றத்தை எட்டியிருக்கிறது. இதே இடத்தில் டிராவல் துறையை சேர்ந்த பலரின் தொடர்பும் இவருக்கு கிடைத்திருக்கிறது. அப்படி கிடைத்த தொடர்புகள் மூலம் 1986-ம் ஆண்டு மதுரா டிராவல்ஸ் லிமிடெட் சர்வீஸை தொடங்கினார். பின்னர் அதே டிராவல்ஸ் துறையின் முன்னோடியாக மாறினார்.

தமிழகத்தில் 365 நாட்களும் 24 மணி நேர பயண சேவைகளை அறிமுகப்படுத்தியதில் இவருக்கு முக்கிய பங்கு இருக்கிறது. இன்றும் மதுரா டிராவல்ஸ் சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திற்கு எதிரிலுள்ள வி.கே.டி. பாலனின் சொந்த கட்டிடத்தில் இயங்கி வருகிறது. தொழில்முனைவோர் பலருக்கும் ஊக்கமளித்துள்ள இவருக்கு தமிழக அரசு கலைமாமணி விருது வழங்கி கெளரவித்திருக்கிறது.

பாலனின் வாழ்க்கை பலருக்கும் இன்ஸ்பிரேஷன். காணொளி பேட்டிகள் மூலமாக அவர் இன்றைய தலைமுறைக்கும் அறிமுகம் ஆகி வழிகாட்டியாக இருந்திருக்கிறார். அவரது உழைப்பு மற்றும் அர்ப்பணிப்ப்பு உணர்வை அங்கீகரிக்கும் வகையில் உலகின் எந்த நாட்டுக்கும் விமானத்தில் இலவசமாக பயணம் செய்யவும், விடுதிகளில் தங்கவும் அனுமதி பெற்றவர்.

உழைப்பால் உலகளந்த மனிதர் என்ற பெருமைக்கு மிகவும் பொருத்தமானவர் வி.கே.டி பாலன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...