No menu items!

விராட் கோலிக்கு அபராதம் ? – என்ன நடந்தது?

விராட் கோலிக்கு அபராதம் ? – என்ன நடந்தது?

கிரிக்கெட் போட்டிகளின்போது எதிரணி வீர்ர்களிடம் ஆக்ரோஷமாக போய் மோதுவது விராட் கோலியின் தனிக்குணம். அந்த வகையில் மெல்பர்ன் நகரில் நடக்கும் பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய வீரர் சாம் கான்ஸ்டஸுடன் விராட் மோத, இப்போது அவருக்கு பிரச்சினை வந்திருக்கிறது.

இந்திய கிரிக்கெட் அணி, இப்போது ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து வருகிறது. ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக 5 டெஸ்ட் போட்டிகளில் இந்தியா ஆடுகிறது. 3 போட்டிகள் முடிந்த நிலையில் 1-1 என்ற புள்ளிக்கணக்கில் இப்போது தொடர் சமநிலையில் இருக்கிறது.

இந்த சூழலில் இன்று தொடங்கிய 4-வது டெஸ்ட் போட்டியில் சாம் கான்ஸ்டஸ் என்ற புதிய தொடக்க வீர்ரை அறிமுகம் செய்திருக்கிறது ஆஸ்திரேலியா. 19 வயதே ஆன இந்த வீரர், பிக் பாஷ் தொடரில் சிட்னி தண்டர் அணிக்காக அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் ஆஸ்திரேலிய அணியில் சேர்க்கப்பட்டார். வார்னரைப் போல அதிரடியாக பேட்டிங் செய்பவர் என்று அணிக்குள் நுழையும்போதே அவருக்கு நல்ல பெயர் இருந்தது.

அந்த பெயருக்கு ஏற்ப இன்று காலை முதல் செஷனிலேயே தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார் கான்ஸ்டஸ். மற்ற ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் எல்லாம் பும்ராவைக் கண்டு அலற, சாம் கான்ஸ்டஸ் பும்ராவையே அலறவிட்டார். அவரது பந்தை சிக்சருக்கு விரட்டி, இந்திய ரசிகர்கள் வயிற்றில் புளியைக் கரைத்தார்.

இந்த சமயத்தில்தான் விராட் கோலி அவரை வம்புக்கு இழுத்தார். 10-வது ஓவரின் முடிவில் பந்தை கையில் எடுத்துக்கொண்டு ஓவர் மாற்றுவதற்காக விராட் கோலி நடந்து சென்றுகொண்டு இருந்தார். அப்போது அதே பாதையில் எதிர்புறம் கோன்ஸ்டஸ் நடந்து வந்தார். 

அப்போது இருவரும் தோளோடு தோள் இடித்துக்கொண்டனர். கோன்ஸ்டஸ் தன் மீது இடித்ததாக கோலி சண்டைக்கு போக, அவர்தான் தன் மீது மோதினார் என்றார் கோன்ஸ்டஸ். இதைத்தொடர்ந்து இருவருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது.   உடனடியாக அருகில் இருந்த உஸ்மான் கவஜா மற்றும் நடுவர்கள் உள்ளே புகுந்து சண்டையை நிறுத்தினார்கள். ஆனால் அந்த இடத்தில் விராட் கோலி தான் வேண்டுமென்றே கோன்ஸ்டஸ் மீது மோதியதாக நேரலையில் ரிக்கி பாண்டிங் மற்றும் மைக்கேல் வாகன போன்ற முன்னாள் வீரர்கள் விமர்சித்தார்கள். அந்த மோதல் நடந்த காட்சிகளைப் பார்க்கும்போது விராட் கோலிதான் வேண்டுமென்றே கான்ஸ்டஸ் மீது மோதியதாக தெரியவந்துள்ளது. கோன்ஸ்டன் தன் பாதையில் செல்ல, விராட் கோலி வேண்டுமென்றே அவரது பாதையில் சென்று இடித்ததாக தெரிகிறது.

இந்த விஷயத்தில் யார் மீது தவறு இருக்கிறது என்பதை போட்டி நடுவர் ஆண்டி பைகிராஃப்ட் விசாரிப்பார் என ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. விராட் கோலி மீது தவறு இருந்தால் நடுவர் லெவல் 1 அல்லது லெவல் 2 விதிமுறை மீறியதாக பரிந்துரை செய்வார். அதை ஏற்றுக் கொண்டு ஐசிசி 3 அல்லது 4 கருப்பு புள்ளிகளை தண்டனையாக கொடுக்க (லெவல் 2 விதிமுறை) வாய்ப்புள்ளதாக கூறப்பட்டது.

இந்நிலையில்   சாம் கான்ஸ்டாஸை வேண்டுமென்றே அவரது தோள்பட்டையில் இடித்த விவகாரத்தில், விராட் கோஹ்லியின் தவறனா நடத்தைக்காக அவருக்கு போட்டி ஊதியத்தில் 20% அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...