No menu items!

விக்ராந்த் மாஸ்ஸி திடீர் ஓய்வு! – என்ன காரணம்?

விக்ராந்த் மாஸ்ஸி திடீர் ஓய்வு! – என்ன காரணம்?

பாலிவுட் நடிகர் விக்ராந்த் மாஸ்ஸி திரைப்படத்திலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருக்கிறார். இது இந்தி திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

விக்ராந்த் முதன் முதலில் தூம் மச்சாவோ தூம் என்ற டிவி நடன நிகழ்ச்சியின் மூலம் தான் மக்கள் மத்தியில் அறிமுகம் ஆனார். பின் அவர் தனது நடிப்பு பயணத்தைத் தொடங்கி 2009 ஆம் ஆண்டில் பாலிகா வாது திரைப்படம் மூலம் சினிமாவிற்குள் நுழைந்தார். இதையடுத்து அவர் பல படங்களில் நடித்திருந்தாலும் 12th fail தான் அவருக்கான அடையாளத்தை சினிமாவில் பெற்றுக் கொடுத்தது.

ஐபிஎஸ் ஆக வேண்டும் என்ற கனவோடு சிறு கிராமத்தில் இருந்து வந்த நபர், எந்தவித பொருளாதார உதவிகளும் இல்லாமல், தன்னைத் தானே வருத்தி எப்படி வெற்றி பெருகிறார் என்பதை மிக அழகாகவும் பார்ப்போருக்கு உத்வேகம் அளிக்குமாறும் நடித்திருப்பார் விக்ராந்த் மாஸ்ஸி

இந்தப் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, விக்ராந்த் ஆர்டிக்கள் 36, தி சபர்மதி ரிப்போர்ட் என அடுத்தடுத்த ஹிட் படங்களில் நடித்து தன் திறமையை நிரூபித்தார். குஜராத் கலவரத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட தி சபர்மதி ரிப்போட் படம் பலரால் பாராட்டை பெற்று வந்தாலும், சிலர் மிகவும் மோசமாக படத்தை விமர்சனம் செய்தனர்.

அவர் 2022 இல் நடிகை ஷீத்தல் தாக்கூரை மணந்தார், அவர்கள் “பிரோக்கன் அண்ட் பியூட்டிஃபுல்” படப்பிடிப்பில் டேட்டிங் செய்யத் தொடங்கினர். பிப்ரவரி 2024 இல், நடிகர் தான் ஒரு பையனுக்கு தந்தையாகிவிட்டதாக அறிவித்தார்.

இந்த நிலையில் படங்களில் நடிப்பதிலிருந்து விலகுவதாக அறிவித்து இன்ஸ்டாகிராம் பக்கதில் பதிவிட்டிருக்கிறார். அதில்

“இது மீண்டும் வீட்டிற்குச் செல்ல வேண்டிய நேரம்” என்றும், 2 படங்களில் நடிக்க கமிட் ஆகி உள்ளதால் 2025ம் ஆண்டுடன் நடிப்பில் இருந்து ஓய்வு பெற உள்ளேன் என்று அறிக்கையில் தெரிவித்துள்ளார். “அனைவருக்கும் வணக்கம், கடந்த சில வருடங்கள் எனக்கு மிகவும் சிறப்பாக அமைந்தது. உங்களது அழியாத ஆதரவுக்காக உங்கள் ஒவ்வொருவருக்கும் எனது நன்றிகள். ஆனால் நான் முன்னோக்கிச் செல்லும்போது, மறுபரிசீலனை செய்து வீட்டிற்குத் திரும்புவதற்கான நேரத்தை நான் உணர்கிறேன். கணவன், தந்தை மற்றும் மகனாக. மேலும் ஒரு நடிகராகவும். எனவே வரும் 2025ல், கடைசியாக ஒருமுறை மீண்டும் சந்திப்போம்.

காலம் சரியாக இருக்கும் வரை. கடந்த 2 படங்கள் எனக்கு பல வருட நினைவுகளை கொடுத்துள்ளது. மீண்டும் நன்றி. என்றென்றும் நன்றிக் கடன்பட்டுள்ளேன்” என்று தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...