No menu items!

பெரியார் சிலைக்கு விஜய் மரியாதை

பெரியார் சிலைக்கு விஜய் மரியாதை

சென்னை எழும்பூரில் உள்ள பெரியார் நினைவிடத்தில் நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் மரியாதை செலுத்தினார்.

தந்தை பெரியாரின் பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் சென்னை எழும்பூரில் உள்ள பெரியார் நினைவிட்த்துக்கு விஜய் வந்துள்ளார். அங்குள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அப்போது தமிழக வெற்றிக் கழக பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் மற்றும் கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர். கட்சி ஆரம்பிப்பதாக அறிவித்த பிறகு பொதுவெளியில் தலைவர் ஒருவரின் சிலைக்கு விஜய் மாலை அணிவிப்பது இதுவே முதல் முறையாகும்.

முன்னதாக இன்று காலை தந்தை பெரியாரின் 146-வது பிறந்தநாளையொட்டி தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் கூறியிருப்பதாவது:-

சாதி, மத ஆதிக்கம் மற்றும் மூடப்பழக்க வழக்கங்களால் விலங்கிடப்பட்டுக் கிடந்த தமிழக மக்களிடையே விழிப்புணர்வை விதைத்தவர். பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற சுய விடுதலை வேட்கையின் மூலம், ஏற்றத் தாழ்வுகளால் உண்டாக்கப்பட்ட அடிமைத் தளைகளை அறுத்தெறிந்தவர்; மக்களைப் பகுத்தறிவு மனப்பான்மையுடன் போராடத் தூண்டியவர்.

சமூகச் சீர்திருத்தவாதி, பகுத்தறிவுப் பகலவன், தென்னகத்தின் சாக்ரட்டீஸ், தந்தை பெரியார் அவர்களின் பிறந்த நாளில். அவர் வலியுறுத்திய பெண் உரிமை, பெண்கல்வி, பெண்கள் பாதுகாப்பு, சமத்துவம், சம உரிமை, சமூகநீதிப் பாதையில் பயணிக்க உறுதியேற்போம்

இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

தமிழிசை சவுந்தர்ராஜன் கருத்து

தந்தை பெரியார் சிலைக்கு விஜய் மாலை அணிவித்தது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், “நடிகர் விஜய் கட்சித் தொடங்குவதற்கு முன்பே திராவிட சாயலில் பயணிப்பதைபோல் தெரிகிறது. திராவிட சாயலில் வேறொரு கட்சித் தமிழகத்திற்கு தேவையில்லை. தேசிய சாயலில் வர வேண்டும்; விஜய் மாற்றி பயணிப்பார் என நினைத்தேன். பெரியார் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவிக்கும் விஜய், திராவிட மாதிரி போன்று பேசுகிறார். விஜய்யின் சாயம் வெளுக்கிறதா? அல்லது வேறொரு சாயத்தை பூசுவாரா என்பது போகப்போகத்தான் தெரியும்” என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...