விஜய் நடிக்கும் கடைசி படமான ‘ஜனநாயகன்’, அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வருகிறது என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. எச். வினோத் இயக்கும் இந்த படத்தின் கதை அரசியல் கலந்தது. அதனால்தான் இந்த தலைப்பு என்று கூறப்படுகிறது. ஒரு சிலரோ தெலுங்கில் வெற்றி பெற்ற ஒரு படத்தின் அதிகாரப்பூர்வமற்ற ரீமேக் என்கிறார்கள். விஜய் நடிக்கும் கடைசி படம் என்பதாலும், படம் வெளியான சில மாதங்களில் சட்டசபை தேர்தல் வருவதாலும், ஜனநாயகன் படத்துக்கு கூடுதல் எதிர்பார்ப்பு. விஜய் படம் வருவதால், நாம ஒதுங்கிக்கொள்வோம் என பல படங்கள் பொங்கல் ரிலீசை தவிர்க்கின்றன
இந்நிலையில், சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘பராசக்தி’ படம், பொங்கலுக்கு வெளியாக உள்ளது என்று தகவல் கசிகிறது. என்னது, விஜயுடன் மோதுகிறாரா சிவகார்த்திகேயன். கோட் படத்தில் அவர் கவுர வேடத்தில் நடித்தார். எனக்குபின் நீங்கதான் என்று விஜய் மறைமுகமாக சொல்லிவிட்டார். இந்த நிலையில், விஜயின் கடைசி படத்துடன் சிவகார்த்திகேயன் மோதுகிறாரா? இதற்கு எப்படி அவர் ஓகே சொன்னார் என்ற கேள்வி எழுந்துள்ளது.
இது குறித்து விசாரித்தால், ‘‘பொங்கலுக்கு ஜனநாயகன் ரிலீஸ் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி விட்டது. ஆனால், சிவகார்த்திகேயனின் பராசக்தி குறித்து இதுவரை எதுவும் சொல்லவில்லை. அந்த பட தயாரிப்பாளர் சில பேட்டிகளில் பொங்கலுக்கு ரிலீஸ் என்கிறார். அதுதான் பிரச்னை ஆகியுள்ளது. விஜய் படத்துடன் சிவகார்த்திகேயன் படம் மோதுவது ரசிகர்கள் மத்தியிலும் அதிருப்தியை உருவாகி உள்ளது. இப்போதே விஜய் ரசிகர்கள் பொங்க ஆரம்பித்துவிட்டார்கள். ஆகவே, பராசக்தி விஷயத்தில் சிவகார்த்திகேயன் விரைவி்ல் முக்கியமான முடிவை எடுக்க வாய்ப்பு. ஒரு படத்தின் ரிலீஸ் குறித்த முடிவை தயாரிப்பாளர்தான் எடுப்பார்.
ஆனாலும், சிவகார்த்திகேயன் பெரிய ஹீரோ என்பதால், அவர் தன் பங்கிற்கு சில கருத்துகளை தெரிவிக்கலாம். ஒருவேளை பொங்கலுக்கு இரண்டு படங்கள் மோதுகிற வாய்ப்பு ஏற்பட்டால், அந்த சமயம் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. தியேட்டர் பிடிப்பதில் மோதல் வரும். விஜய் மீது சிவகார்த்திகேயனுக்கு தனி மரியாதை பாசம் உண்டு. அவர் அரசியலுக்கு செல்வதால், அவர் ரசிகர்களை தன் பக்கம் இழுக்க நினைக்கிறார். இந்த சமயத்தில் இந்த போட்டியை அவர் விரும்பமாட்டார். விஜய்க்கு அரசியல் ரீதியிலான போட்டியை ஏற்படுத்த, இந்த போட்டியை சிலர் உருவாக்குகிறார்கள்.