No menu items!

கூவத்தூரில் த்ரிஷா – அதிமுக பிரமுகரின் அவதூறும் கண்டனம் தெரிவிக்காத நடிகர் சங்கமும்!

கூவத்தூரில் த்ரிஷா – அதிமுக பிரமுகரின் அவதூறும் கண்டனம் தெரிவிக்காத நடிகர் சங்கமும்!

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட சேலம் ஒன்றிய செயலாளர் ஏவி ராஜு அதிமுகவை கடுமையாக விமர்சித்து வருகிறார். நேற்று ஊடகங்களுக்கு அளித்த பேட்டி ஒன்றில் கூவத்தூரில் நடந்ததாக சில சம்பவங்களை சொல்லியிருக்கிறார். அவர் சொன்ன விஷயங்கள் ட்ரெண்டிங்கில் சென்றுக் கொண்டிருக்கிறது.

குறிப்பாக, தமிழ் சினிமாவில் டாப் நடிகையான திரிஷாவை குறித்து போகிற போக்கில் அவர் சொன்ன விஷயம் பெரிய பிரளயத்தையே கிளப்பியிருக்கிறது.
என்ன நடந்தது?

சேலம் மேற்கு ஒன்றிய அதிமுக செயலாளராக இருந்தவர் ஏ.கே.ராஜூ. இவர் சமீப காலமாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீதும், சேலம் மாநகர் மாவட்ட அதிமுக செயலாளர் வெங்கடாசலம் மீதும் பல்வேறு குற்றச்சாட்டுகளை வைத்து வருகிறார்.

நேற்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், 2017ல் ஆட்சியை கவிழாமல் தக்க வைக்க கூவத்தூரில் தங்கவைக்கப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்களுக்கு மது மற்றும் பெண்களை எடப்பாடி பழனிசாமி தரப்பினர் செய்து கொடுத்ததாகவும் ராஜு கூறியிருக்கிறார். எம்.எல்.ஏ.க்கள் நடிகைகளை கேட்டதாகவும் அவர்களுக்கு நடிகைகளை கொண்டு வந்ததாகவும் குற்றஞ்சாட்டியிருக்கிறார். நடிகரும் முன்னாள் எம்எல்ஏ-வுமான முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ் தான், நடிகைகளை அழைத்து வந்ததாகவும் பேட்டியளித்திருக்கிறார். குறிப்பாக, நடிகை த்ரிஷா குறித்து மிகவும் அவதூறான கருத்துக்களை சொல்லியிருக்கிறார். ஒரு இரவுக்கு 25 லட்ச ரூபாய் கொடுத்து நடிகைகள் கொண்டு வரப்பட்டனர் என்றும் சொல்லியிருக்கிறார். ராஜூ கூறிய அவதூறு கருத்துக்கள் இப்போது சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகிறது.

சில யூடியுப் சேனல்கள் த்ரிஷா என்ற பெயரை ‘பீப்’ செய்து வெளியிட்டிருக்கின்றன. ஆனால் ‘பீப்’ செய்யாத பேச்சு சமூக வலைதளங்களில் வந்திருக்கிறது.

ராஜூவின் பேச்சுக்கு இதுவரை த்ரிஷா எதிர்வினை செய்யவில்லை.

இயக்குநரும் நடிகருமான சேரன் மட்டும் தன் கண்டனங்களை பதிவு செய்திருக்கிறார்.

இது தொடர்பாக தனது எக்ஸ் தள பக்கத்தில் ஆதங்கப்பட்டுள்ள இயக்குநர் சேரன், ‘அதிமுக பிரமுகரின் பேச்சை வன்மையாக கண்டிக்கிறேன். எந்த ஆதரமுமின்றி பொது வெளியில் திரைத்துறையினர் பற்றி பெயர் சொல்லி அவதூறு கிளப்பிய இவர் மீது சட்டமும் காவல்துறையும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். நடிகர் சங்கம் இதற்கு உரிய பதில் கொடுப்பதுடன் தகுந்த நடவடிக்கையும் எடுக்கும் என நம்புகிறேன்’ என பதிவிட்டுள்ளார். அவர் தனது பதிவுடன் நடிகர் சங்க தலைவர் விஷால், நடிகர் கார்த்தி ஆகியோரையும் டேக் செய்துள்ளார்.

ஆனால் இதுவரை நடிகர் சங்கம் எந்த வித கண்டனத்தையும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...