No menu items!

டெல்லி அரசியலில் பரபரப்பு – குடியரசு தலைவர் ஆட்சி அமல் ஆகுமா?

டெல்லி அரசியலில் பரபரப்பு – குடியரசு தலைவர் ஆட்சி அமல் ஆகுமா?

டெல்லியில் அடுத்த ஆண்டு ஜனவரிக்குள் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், குடியரசு தலைவர் ஆட்சி குறித்த விவாதம் டெல்லி அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி நடைபெற்று வருகிறது. முதலமைச்சராக அரவிந்த் கெஜ்ரிவால் பதவி வகித்து வருகிறார். சட்டசபை தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ளன. இந்நிலையில், குடியரசு தலைவர் ஆட்சி குறித்த விவாதம் திடீரென எழுந்துள்ளது. டெல்லி பாஜக எம்எல்ஏக்கள், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் 5 மாதங்களாக சிறையில் இருப்பதால் அரசியல் சாசன நெருக்கடி ஏற்பட்டு உள்ளது எனக் கூறி குடியரசுத் தலைவரிடம் மனு அளித்துள்ளனர்.

அதை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அவர்கள், உள்துறை அமைச்சகத்தின் பரிசீலனைக்கு அனுப்பியுள்ளதாக சில ஊடகச் செய்திகள் வெளியாகி வருகின்றன.

டெல்லி எதிர்க்கட்சித் தலைவரும், பாஜக எம்எல்ஏவுமான விஜேந்திர குப்தா, கடந்த ஆகஸ்ட் 30ஆம் தேதி குடியரசுத் தலைவரைச் சந்தித்து, டெல்லி ஆட்சியின் நிலவரம், ஆளும் கட்சியின் செயல்பாடு என பல பிரச்னைகளை குறித்து பேசியதாகவும், தங்கள் அறிக்கையை பெற்றுக்கொண்ட குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, உள்துறைச் செயலாளருக்கு அனுப்பியுள்ளதாக டெல்லி பாஜக வட்டாரம் தெரிவித்துள்ளது.

அடுத்து டெல்லி அரசியலில் உள்துறை அமைச்சகத்தின் நிலைப்பாடு என்னவாக இருக்கும் என்பதை என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், அரசியல் சூடுபிடித்துள்ளது. இதைத் தொடர்ந்து ஆம் ஆத்மி கட்சிக்கும் பாஜகவுக்கும் இடையே வார்த்தைப் போர் மூண்டுள்ளது.  

இது தொடர்பாக டெல்லி அமைச்சர் அதிஷி கூறுகையில், பாரதீய ஜனதாவுக்கு ஒரே ஒரு வேலை, இந்திய மக்களால் தேர்ந்தடுக்கப்பட்ட அரசாங்கங்களை கவிழ்ப்பது தான். தேர்தலில் வெற்றி பெறாமல், குதிரை பேர முயற்சி மூலம் எம்எல்ஏக்கள் விலைக்கு வாங்கி புறவாசல் வழியாக ஆட்சி அமைக்க முயற்சிக்கின்றனர். அதுபோல டெல்லியிலும் முயற்சி பாஜகவினர் செய்கிறார்கள். ஆனால், அதில் பாஜக வால் வெற்றி பெற முடியவில்லை. எங்கள் கட்சி எம்எல்ஏக்களை விலைக்கு வாங்க முடியவில்லை. எனவே தற்போது அவர்கள் இரண்டாவது சதித்திட்டத்தை தீட்டி உள்ளனர்.

டெல்லியில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியை கவிழ்க்க சதித்திட்டத்தை பாஜக ஆரம்பித்துள்ளது. ஆனால், பாரதிய ஜனதா கட்சிக்கு ஒன்றை சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். டெல்லி மக்கள் எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள். அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆட்சியை கவிழ்த்தால், வரும் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சிக்கு டெல்லி மக்கள் தகுந்த பதிலடி கொடுப்பார்கள்.

டெல்லியில் குடியரசு தலைவர் ஆட்சியை அமல்படுத்தினால் தற்போது இருக்கும் எட்டு எம்எல்ஏக்கள் கூட, வரும் தேர்தலில் வெற்றி பெற முடியாது. அவர்களுக்கு பூஜ்ஜிய இடங்களே கிடைக்கும் என்று நான் உறுதியாகச் சொல்கிறேன்” என்று கூறியுள்ளார்.

இந்த விவகாரம் குறித்து பேசிய ஆம் ஆத்மி கட்சியின் ராஜ்யசபா எம்.பி., சஞ்சய் சிங் பேசும்போது, “டெல்லியில் எப்போது தோற்க வேண்டும் என்பதை அக்கட்சியே தீர்மானிக்க வேண்டும். இப்போது தோற்க வேண்டுமா அல்லது நான்கு மாதங்களுக்குப் பிறகு தோற்க வேண்டுமா என்பதை பாஜக தான் முடிவு செய்ய வேண்டும். உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பப்பட்டுள்ள குறிப்பாணை விவகாரத்தை மேற்கோள்காட்டி, டெல்லியில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என பாஜக நினைப்பதை பார்த்தால், நான்கு மாதங்களுக்கு முன்னரே தோல்வியை ஏற்றுக்கொள்ள டெல்லி பாஜக முடிவு செய்துள்ளது” எனக் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...