No menu items!

மலையாள சினிமா செக்ஸ் சிக்கல் – சுரேஷ் கோபி Vs பத்திரிகையாளர்கள் – என்ன நடந்தது?

மலையாள சினிமா செக்ஸ் சிக்கல் – சுரேஷ் கோபி Vs பத்திரிகையாளர்கள் – என்ன நடந்தது?

பத்திரிகையாளர்கள் தன்னை வழிமறித்து தொந்தரவு செய்ததாக மத்திய அமைச்சரும் நடிகருமான சுரேஷ் கோபி புகார் தெரிவித்துள்ளார்.

மலையாள திரைத்துறையில் பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் தொந்தரவுகள் தொடர்பான ஹேமா கமிஷனின் விசாரணை அறிக்கை சமீபத்தில் வெளியானது. இதைத்தொடர்ந்து பாலியல் ரீதியாக பாத்கிக்கப்பட்ட நடிகைகள் பலரும், சினிமா நட்சத்திரங்கள் மற்றும் இயக்குநர்கள் மீது ’மீ டூ’ புகார்களை தெரிவித்து வருகின்றனர். இதில் குற்றம் சாட்டப்பட்டுள்ள சிலர் மலையாள திரையுலகில் தாங்கள் வகித்து வரும் பதவியில் இருந்து விலகினர். ஹேமா கமிஷனின் அறிக்கையை தொடர்ந்து கேரள நடிகர் சங்கமான அம்மாவின் நிர்வாகிகள் அனைவரும் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர்.

மலையாள திரையுலகில் இப்போது ஏற்பட்டுள்ள பிரச்சினை தொடர்பாக பொது இடத்தில் வைத்து நடிகரும், மத்திய அமைச்சருமான சுரேஷ் கோபியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது செய்தியாளர்களிடம் கோபப்பட்ட சுரேஷ் கோபி, “நான் கட்சி அலுவலகத்தில் இருந்து வரும்போது அரசியல் தொடர்பான கேள்விகளை கேட்க வேண்டும். சினிமா தொடர்பான நிகழ்ச்சிகளில் பங்கேற்க வரும்போது சினிமா தொடர்பான கேள்விகளை கேட்க வேண்டும். கண்ட இடத்தில் கண்ட கேள்விகளை கேட்கக் கூடாது.

மலையாள திரையுலகுக்கு இப்போது ஏற்பட்டுள்ள நிலை பத்திரிகைகள் சம்பாதிக்க நல்ல தீனியாகத்தான் இது இருக்கப் போகிறது. பத்திரிகைகள் மோதல்களை உருவாக்கிவிட்டு ரத்தம் குடிக்க காத்திருக்கின்றன” என்றார். அதோடு செய்திளர்கள் சிலரை தள்ளிவிட்டு அவர் சென்றதாக கூறப்படுகிறது.

இதுதொடர்பாக சுரேஷ் கோபி மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கக் கோரி காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏ அனில் அக்கரே திருச்சூர் காவல் ஆணையரிடம் புகார் அளித்தார். புகார் குறித்து விசாரணை நடத்த உதவி ஆணையருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் பத்திரிகையாளர்கள் தன்னை வழிமறித்து தொந்தரவு செய்ததாக்க் கூறி சுரேஷ் கோபியும் திருச்சூர் காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளார். இது கேரள பத்திரிகையாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...