இந்தியாவில் எத்தனையோ ஆங்கில படங்கள் வெளியாகின்றன. ஆக் ஷன், காதல், கிரைம், கிளாசிக் என பல ஜானர்களில் அந்த படங்கள் வந்தாலும், அனைத்து தரப்பு மக்களாலும் பார்த்து ரசிக்கப்பட்ட படங்கள் வெகு குறைவு. சில படங்கள் மட்டுமே இந்தியாவின் அனைத்து பகுதிகளையும் சேருகின்றன. அதில் ஜூராசிக் பார்க் படத்துக்கு தனி இடமுண்டு. டைனோசர் பின்னணியில் வந்த அந்த படத்தில் கதையும், காட்சியும் இந்திய மக்களால் வெகுவாக ரசிக்கப்பட்டது. பல மாநிலங்களில் கோடிகளை குவித்தது வசூல்
ஸ்டீபன் ஸ்பீல்பெர்க் இயக்கத்தில் ஜூராசிக் பார்க் முதல் பாகம் 1993ம் ஆண்டு வெளியானது. அந்த படம் உலகம் முழுக்க பெரிய வெற்றியை பெற்றது. அதை தொடர்ந்து ஜுராசிக் பார்க் 2( 1997) ஜுராசிக் பார்க் III (2001), ஜுராசிக் வேர்ல்ட் (2015), ஜுராசிக் வேர்ல்ட்: ஃபாலன் கிங்டம் (2018), ஜுராசிக் வேர்ல்ட் டொமினியன் (2022) ஆகிய படங்கள் வெளியாகின. இந்த படங்கள் இந்தியாவில் தமிழ் உட்பட பல மொழிகளில் டப் செய்யப்படும் ரிலீஸ் ஆனது
இந்நிலையில், ஜூராசிக் பார்க் அடுத்த பாகமான ‘ஜுராசிக் வேர்ல்ட்: ரீபர்த்’ படம் லை 4, 2025 அன்று தியேட்டர்களில் வெளியாக உள்ளதாக, அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. முன்னதாக, வார்னர் பிரதர்ஸ் டிஸ்கவரி விநியோகிக்கும் யுனிவர்சல் பிக்சர்ஸின் ‘ ஜுராசிக் வேர்ல்ட்: ரீபர்த்’ டிரைலர் நேற்று வெளியாகியுள்ளது. பாஃப்டா வின்னர் கரேத் எட்வர்ட்ஸ் இயக்கியுள்ள இந்த ஆக்ஷன் அட்வென்ச்சர் படத்தில் அகாடமி விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட ஸ்கார்லெட் ஜோஹன்சன், எம்மி விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட மற்றும் ஆலிவர் விருது வென்ற ஜொனாதன் பெய்லி, மஹெர்ஷாலா அலி மற்றும் லூனா பிளேஸ் மற்றும் ரூபர்ட் ஃப்ரெண்ட் உள்ளிட்டப் பலர் நடித்துள்ளனர்.
இந்த படத்தின் கதை ஜுராசிக் வேர்ல்ட் டொமினியனுக்குப் பிறகு வருகிறது. அங்கு மீதமுள்ள டைனோசர்கள் தனிமைப்படுத்தப்பட்ட அங்கு தன் இனத்தைப் பெருக்கி இருக்கிறது. அந்தச் சூழலில் இருக்கிற மிகப் பிரம்மாண்டமான மூன்று டைனோசர்கள், மனித இனத்துக்கு அதிசயிக்கத்தக்க உயிர்காக்கும் நன்மைகளைக் கொண்டுவரப்போகும் ஒரு மருந்தின் திறவுகோலைக் கொண்டிருக்கின்றன. இதில் நடிகர் ஜொனாதன் பெய்லி தொல்லுயிரியலாளர் டாக்டர் ஹென்றி லூமிஸாகவும் நடிகர் ஸ்கார்லெட் ஜோஹன்சன் திறமையான இரகசிய செயல்பாட்டு நிபுணர் ஜோரா பென்னட்டாகவும் நடித்துள்ளார்கள்.