ஸ்ரீலீலா மீண்டும் ஒரு சிறப்பு பாடலுக்கு நடனமாட உள்ளதாக வெளியாகி இருக்கும் தகவல் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
‘புஷ்பா 2’ படத்தில் அல்லு அர்ஜுனுடன் ‘கிஸ்ஸிக்’ என்ற சிறப்புப் பாடலில் நடனமாடிய பிறகு நடிகை ஸ்ரீலீலாவின் புகழ் நாடு முழுவதும் பரவியது. விரைவில் கார்த்திக் ஆர்யனுக்கு ஜோடியாக பாலிவுட்டில் இவர் அறிமுகமாக உள்ளார்.
இது மட்டுமில்லாமல், அகிலுடம் ‘லெலின்’, ரவி தேஜாவுடன் ‘மாஸ் ஜாதரா’ மற்றும் தமிழில் சிவகார்த்திகேயனின் ‘பராசக்தி’ படத்திலும் ஸ்ரீலீலா நடித்து வருகிறார்.
இந்நிலையில், ராம் சரணின் ‘பெத்தி’ படத்தில் ஸ்ரீலீலா நடனமாட இருப்பதாக புதிய தகவல் வெளியாகி இருக்கிறது. ஏ.ஆர்.ரகுமான் இசையமைப்பில் ஒரு குத்து பாடலுக்கு ஸ்ரீலீலாவை நடனமாட வைக்க ‘பெத்தி’ பட தயாரிப்பாளர்கள் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.