No menu items!

பாகிஸ்தானை கண்காணிக்கும் உளவு சேட்டிலைட்கள் – இஸ்ரோ வி.​நா​ராயணன்

பாகிஸ்தானை கண்காணிக்கும் உளவு சேட்டிலைட்கள் – இஸ்ரோ வி.​நா​ராயணன்

திரிபுரா மாநிலம் அகர்​தலா​வில் உள்ள மத்​திய வேளாண் பல்​கலைக்​கழகத்​தின் பட்​டமளிப்பு விழா கடந்த ஞாயிற்​றுக்​கிழமை நடை​பெற்​றது. அதில் சிறப்பு விருந்​தின​ராக இந்​திய விண்​வெளி ஆய்​வுத் துறை (இஸ்​ரோ) தலை​வர் வி.​நா​ராயணன் பங்​கேற்​றார்.

அப்​போது மாணவர்​கள் மத்​தி​யில் அவர் பேசி​ய​தாவது: பஹல்​காம் தாக்​குதலுக்கு பிறகு இந்​தியா – பாகிஸ்​தான் இடையே பதற்​றம் நீடிக்​கிறது. இந்​நிலை​யில், இந்​திய நிலப்​பரப்பு மற்​றும் மக்​களின் பாது​காப்பை உறுதி செய்​வதற்கு இஸ்​ரோ​வின் 10 சேட்​டிலைட்​கள் பாகிஸ்​தானை 24 மணி நேர​மும் கண்​காணித்து வரு​கின்​றன.

நமது நாட்​டின் பாது​காப்பை உறுதி செய்ய வேண்​டு​மா​னால், சேட்​டிலைட் மூலம் தொடர்ந்து கண்​காணித்து உடனுக்​குடன் தகவல் தெரிவிக்க வேண்​டும். அதன்​படி இந்​தி​யா​வின் 7,000 கி.மீ. தூரம் கொண்ட கடலோ​ராப் பகு​தி​களை இஸ்ரோ சேட்​டிலைட்​கள் கண்​காணித்து வரு​கின்​றன. சேட்​டிலைட்​கள் மற்​றும் ட்ரோன் தொழில்​நுட்​பங்​கள் இல்​லை​யென்​றால், நம்​மால் பல முன்​னேற்​றங்​களை காண முடி​யாது.

தற்​போதைய நிலை​யில் 127 சேட்​டிலைட்​களை இஸ்ரோ விண்​ணில் ஏவி​யுள்​ளது. இவற்​றில் தனி​யார் மற்​றும் கல்வி நிறு​வனங்​களின் சேட்​டிலைட்​களும் அடங்​கும். மேலும், அவற்​றில் 22 சேட்​டிலைட்​கள் பூமிக்கு மிக குறைந்த உயரத்​தில் சுற்றி வரு​கின்​றன. 29 சேட்​டிலைட்​கள் பூமியை துல்​லிய​மாக படம் பிடிக்​கும் சேட்​டிலைட்​கள். இவை மத்​திய அரசின் கட்​டுப்​பாட்​டில் உள்​ளன. அதே​போல், கார்​டோசேட், ரிசேட், எமிசேட், மைக்​ரோசேட் உட்பட 12-க்​கும் மேற்​பட்ட உளவு சேட்​டிலைட்​களை​யும் இந்​தியா வைத்​துள்​ளது. இந்த வகை சேட்​டிலைட்​கள் பூமியை கண்​காணிப்​ப​தற்​காகவே உரு​வாக்​கப்​பட்​ட​வை.

சேட்​டிலைட் தொழில்​நுட்​பத்​தில் நாம் ஏற்​கெனவே மிக​வும் பலமாக இருக்​கிறோம். அதை இன்​னும் மேம்​படுத்​து​வது​தான் தேவை. இந்​திய ராணுவம், கப்​பல் படை, விமானப் படைகளுக்கு உதவும் வகை​யில் அந்த வகை சேட்​டிலைட்​களை மேம்​படுத்தி வரு​கிறோம். அதன்​மூலம் எதிரி​களின் நடமாட்​டம், எல்​லைகளை கண்​காணிப்​பது, ராணுவ நடவடிக்​கைகளுக்கு உடனுக்​குடன் தகவல் அனுப்பி ஒருங்​கிணைப்​பது போன்ற பணி​களை செய்து வரு​கிறோம்.

இவ்​வாறு இஸ்ரோ தலை​வர் வி.​நா​ராயணன் கூறி​னார். வரும் 18-ம் தேதி இஓஎஸ் – 09 (ரிசேட்​-1பி) கண்​காணிப்பு சேட்​டிலைட்டை இஸ்ரோ விண்​ணில் ஏவ உள்​ளது குறிப்​பிடத்​தக்​கது. இந்த சேட்​டிலைட் விண்​ணில் ஏவப்​பட்ட பிறகு இந்​தி​யா​வின் பதற்​ற​மான எல்​லைப் பகு​தி​களை முழு​மை​யாக கண்​காணிக்​க முடி​யும்​ என்​று நா​ராயணன்​ கூறி​னார்​.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...