விஷ்ணுவர்தன் இயக்கத்தில் மறைந்த நடிகர் முரளியின் இளைய மகன் ஆகாஷ், ஷங்கர் மகள் அதிதிஷங்கர் நடிக்கும் நேசிப்பாயா படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இதில் சிவகார்த்திகேயன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.
ஆகாஷின் மாமனாரும், மாஸ்டர் படத்தின் தயாரிப்பாளருமான சேவியர் பிரிட்டோ இந்த படத்தை தயாரிப்பதால், விழாவில் தனது மாமனாரை பற்றி உருக்கமாக பேசினார் சிவகார்த்திகேயன். இந்நிகழ்ச்சியில் பேசிய அவர், “அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள். இந்த ஆண்டில் நான் கலந்து கொள்கிற முதல் விழா இது. 2025-ம் ஆண்டு சிறப்பானதாக அமையட்டும். இந்த விழாவுக்கு நான் வர முக்கிய காரணம், சினேகா பிரிட்டோ. தயாரிப்பாளர் பிரிட்டோவின் மகள். ஆகாஷின் மனைவி. அதேபோல், இயக்குனர் விஷ்ணுவர்தனும் நான் விழாவுக்கு வரணும்னு அழைத்தார்.
முதலில் நான் வெளியூர் செல்வராக இருந்தது. இந்த விழாவை தவிர்க்கலாம் என்று நினைத்தேன். ஆனால், என்னிடம் போனில் அழைப்பு விடுத்த தயாரிப்பாளர் தனது மகள் பற்றி பேசிவிட்டு, அவருக்கும், என் மருமகனுக்கும் சினிமா மீது பேஷன் இருக்கிறது. அதனால், சப்போர்ட் பண்ணுகிறேன் என்றார். சரி, விழாவுக்கு வருகிறேன் என்று சொல்லிவிட்டேன். காரணம், சின்ன வயதில் எனக்கு சினிமா, டிவி மீது பேஷன் இருந்தது.
இன்ஜினியரிங் படித்துவிட்டு அதற்கு செல்ல வேண்டும் என்று நினைத்தபோது, என் மாமனாரான, ஆர்த்தியின் அப்பா மனோகரன் ஆதரவு அளித்தார். செய்தார். அவருக்கு எது பிடித்து இருக்கிறதோ, அதை செய்யட்டும் என்று எனக்கு சப்போர்ட் செய்தார். அதை மறக்கவே மாட்டேன். எனக்கு அவர் பொண்ணு கொடுத்ததே பெரிய விஷயம். என் தாய் மாமா என்பதால், எங்கள் குடும்பம் மீதான பாசத்தில் அதை செய்தார்.
எனக்கு அப்போது நிரந்தர வேலை இல்லை. ஒரு எபிஷோடு பண்ணினால், 4 ஆயிரத்து 500 தான் கொடுப்பார்கள். இப்ப விஜய் டிவியில் நிறைய கொடுக்கிறார்கள். அவன் மெட்ராஸ் சாதிக்கணும்னு நினைக்கிறான். அது நடக்கட்டும் என்றார். அவருக்கு 43 வயதில் ஹார்ட் அட்டாக் வந்தது. அவருக்கு 2 பெண்கள். அந்த சமயத்திலங் என் அப்பாவும் காலமாகிவிட, என் அக்கா பசங்களான எங்களையும் பாதுகாக்க பொறுப்பு வந்தது. தனக்கு எதுவும் ஆகிவிடக்கூடாது என்பதற்காக தனது தொழில்களை விட்டு, எங்களை பார்த்துகிட்டார்.
நீ படிச்சு இருக்கே, வேலைக்கு போ, சம்பாதி என துரத்தாமல் என் சினிமா கனவுக்கு உறுதியாக இருந்தார். எனக்கு கிடைத்த மாதிரி, ஆகாசுக்கும் நல்ல மாமனார் கிடைத்து இருக்கிறார். அது நல்ல உறவு விஷ்ணுவர்தன், யுவன்சங்கர்ராஜா கூட்டணி பெரிய வெற்றி கூட்டணி பெற்றது. கல்லுாரி படிக்கிற காலத்தில் இருந்தே எந்த கெட்டப்பழக்கமும் கிடையாது. நிறைய படம் பார்ப்பேன், நிறைய பாடல்கள் கேட்டேன். என் படத்துக்கு யுவன்சங்கர்ராஜா இசையமைக்க வேண்டும் என்று அவரிடம் நேரடியாகவே கேட்டேன். அது ஹீரோ படத்தில் நடந்தது. இந்தியில் விஷ்ணுவர்தன் இயக்கி ஷெர்ஷா பெரிய ஹிட், நான் நடித்த அமரன் படத்தை தமிழ் சினிமாவில் ஷெர்ஷா என்றார்கள். அதிதியிடம் நல்ல எனர்ஜி இருக்கிறது. நிறைய படங்கள் பண்ணுங்க.