No menu items!

மீண்டும் காதலில் சிம்பு !

மீண்டும் காதலில் சிம்பு !

தமிழ் சினிமாவில் எப்போதும் காதல் இளவரசனாக சுற்றி வரும் ஹீரோ என்கிற அடையாளம் சிலம்பரசனுக்கு மட்டும்தான் இருக்கிறது. அவரோடு படத்தில் நடிக்கும் நடிகைகள் பலரையும் அவரோடு இணைத்து அவ்வப்போது கிசுகிசுக்கள் வருவது வாடிக்கையாக இருந்து வருகிறது. அப்படி அவர் நயன் தாராவுடன் நடித்தபோது இருவரும் தீவிரமாக காதலித்து வருவதாக பேசப்பட்டு வந்தது. நயன் தாராவும் சிம்புவும் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில்; பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.

அதோடு ஒரு திரைப்படத்திற்காக நயன் தாராவோடு நெருக்கமாக இருப்பது போன்ற எடுக்கப்பட்ட படங்கள் போஸ்டாராகி சென்னை முழுவதும் பரபரப்பை கிளப்பியது. ஒரு கட்டத்தில் என்ன நடந்ததோ நயன் தாரா சிம்புவை விட்டுப் பிரிந்து விட்டார். அவருடன் எந்த தொடர்பும் இல்லாமல் வெளிப்படங்களில் நடிக்க ஆரம்பித்து விட்டார்.

அதன் பிறகு ஹன்சிகா மோத்வானியோடு நடித்தபோதும் அவருடன் காதல் என்று பேசப்பட்டது. ஹன்சிகா கேட்டதெல்லாம் சிம்பு வாங்கிக்கொடுத்ததாக் கூறப்படுகிறது. இதனால் ஹன்சிகாவோடு திருமணம் நடந்து விடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஒரு கட்டத்தில் அவரும் பிரிந்து சென்று விட்டார். ஆனால் சிம்புவுடனான நட்பை அவர் விடவில்லை. கடைசியாக ஹன்சிகாவுக்காக ஒரு படத்தில் சம்பளம் வாங்காமல் நடித்துக் கொடுத்தார் சிம்பு. அதோடு ஹன்சிகாவின் திருமணத்திற்காக தன் சார்பில் விலையியுர்ந்த பரிசை வாங்கிக் கொடுத்திருக்கிறார்.

இவர்களைவிட விண்ணைத்தாண்டி வருவாயா திரைப்படத்தில் திரிஷாவுடன் நடித்த பிறகு இருவரையும் இணைத்து அதிக கிசுகிசுக்கள் பரவியது. சில மாதங்களுக்கு முன்புகூட இருவரும் திருமணம் செய்துகொள்ளப் போகிறார்கள் என்ற பேச்சு அடிப்பட்டது. ஆனால் இவையெல்லாம் வதந்திகளாகவே நின்று விட்டது. இந்த நிலையில் சில நாட்களாக சிம்பு இளம் நடிகையுடன் டேட்டிங் செய்து வருவதாகவும், அவரைத்தான் திருமணம் செய்து கொள்ள எல்லா ஏற்பாடுகளும் நடந்து வருவதாக செய்திகள் பரவி வருகின்றன.

கடந்த 2021 ஆம் ஆண்டு, சிம்பு – சுசீந்திரன் கூட்டணியில் வெளியான திரைப்படம் ‘ஈஸ்வரன்’. இந்த படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடிகை நிதி அகர்வால் நடித்திருந்தார். இவர்கள் இருவரும் இணைந்து நடித்த போதே, நிதி அகர்வாலிடம் சிம்பு தன்னை மாமா என கூப்பிட வேண்டும் என கட்டாயப்படுத்தியதாகவும், இருவருக்கும் இடையே ஒரு காதல் ட்ராக் ஓடுவதாக கூறப்பட்டது.

சிம்புவும் நிதி அகர்வாலும், டேட்டிங் செய்து வருவதாகவும்… இவர்களுடைய காதலுக்கு சிம்பு பெற்றோர் மற்றும் நிதி அகர்வாலின் பெற்றோர் கிரீன் சிக்னல் தெரிவித்துள்ள நிலையில், கூடிய விரைவில் சிம்பு – நிதி அகர்வால் திருமணம் குறித்த அறிவிப்பு வெளியாகலாம் என கூறப்படுகிறது.

சிலம்பரசன் பற்றி இப்படி தொடர்ந்து பரவி வரும் தகவலுக்கு அவர் எப்போதுமே மறுப்பும் சொன்னதில்லை. அந்த செய்திகள் பொய் என்று சொன்னதும் இல்லை.

பார்ப்போம் என்ன நடக்கிறது என்று.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...