இந்திய தொழிலதிபர்களில் கடந்த ஆடு அதிக நன்கொடைகள் கொடுத்த தொழிலதிபர்களின் பட்டியலை Hurun India நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் HCL (எச்சிஎல்) நிறுவனத்தின் தலைவர் ஷிவ் நாடார் முதல் இடம் பிடித்துள்ளார்.
கடந்த நிதியாண்டில் மட்டும் ஷிவ் நாடார் 2,153 கோடி ரூபாயை பல்வேறு அறப்பணிகளுக்காக நன்கொடையாக வழங்கியுள்ளார். கடந்த 5 ஆண்டுகளில் 3 ஆண்டுகள் இந்த பட்டியலில் அவர் முதலிடம் பிடித்துள்ளார். இதன்படி ஷிவ் நாடார் நாளொன்றுக்கு 5.7 கோடி ரூபாயை நன்கொடையாக வழங்கி உள்ளார். HCL நிறுவனத்தின் தலைவர் ஷிவ் நாடார் ஒரு தமிழர். தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூருக்கு அருகில் உள்ள மூலைப்பொழி கிராமத்தில் பிறந்தவர்.
Hurun India நிறுவனம் வெளியிட்டுள்ள பட்டியலின்படி, கடந்த 2023 – 24 நிதியாண்டில் இந்தியாவைச் சேர்ந்த 203 தொழிலதிபர்கள் இடம் பெற்றுள்ளனர். இவர்கள் நன்கொடையாக மொத்தம் 8,783 கோடி ரூபாய் வழங்கியுள்ளனர். 2 ஆண்டுகளுக்கு முந்தைய நிலவரத்துடன் ஒப்பிடும்போது இது 55 சதவீதம் அதிகமாகும். 100 கோடி ரூபாய்க்கும் அதிகமாக 18 நபர்களும்; 50 கோடி ரூபாய்க்கும் அதிகமாக 30 நபர்களும்; 20 கோடி ரூபாய்க்கும் அதிகமாக 61 நபர்களும் நன்கொடை வழங்கியுள்ளனர்.
இந்த பட்டியலில் ஷிவ் நாடாருக்கு அடுத்ததாக முகேஷ் அம்பானி இடம்பெற்றுள்ளார். அவர் கடந்த நிதியாண்டில் 407 கோடி ரூபாயை நன்கொடையாக வழங்கியுள்ளார். 352 கோடி ரூபாயை நன்கொடையாக கொடுத்த பஜாஜ் 3-வது இடத்தில் உள்ளார். இந்தியாவின் நம்பர் 1 பணக்காரரான கவுதம் அதானி இந்த பட்டியலில் 5-வது இடத்தில் இருக்கிறார்.
இந்த பட்டியலில் முதல் 10 இடங்களைப் பிடித்தவர்கள் பற்றிய விவரம் வருமாறு…