No menu items!

ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு காரணமான ஸ்கிராப் பிசினஸ்!

ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு காரணமான ஸ்கிராப் பிசினஸ்!

பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கு ஆற்காடு சுரேஷ் படுகொலைக்கு பழி வாங்குதல், கட்டப் பஞ்சாயத்து விவகாரம், ஆருத்ரா நிதிநிறுவன மோசடி போன்றவற்றுடன் சென்னை புறநகர் ஸ்கிராப் பிசினஸ் மோதலும் ஒரு காரணமாக இருந்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.

சென்னையின் புறநகர் பகுதிகளின் முக்கிய பிசினஸ் பழைய பொருட்கள் (ஸ்கிராப்) விற்பனை. நாள் ஒன்றுக்கு பல நூறு கோடிகள் புழங்கும் இந்த பிசினஸை யார் கைப்பற்றுவது என்ற போட்டியில், நிழல் உலக தாதாகளுக்கு மத்தியில் எப்போதும் சண்டை நிலவி வருவது வழக்கம். ஸ்கிராப் பிசினஸ் கட்டப் பஞ்சாயத்துகளில், தற்போது வரை அத்தகைய இடங்களுக்கு செல்லாமலேயே கட்டப் பஞ்சாயத்துகளை செய்து வந்தவர் சம்போ செந்தில் என போலீசார் தகவல் தெரிவிக்கின்றனர்.

ஏற்கனவே சோழவரம் நிலம் கைமாறுதல் தொடர்பான கட்டப் பஞ்சாயத்து, திருவள்ளூர் பில்டர்ஸ் தொடர்பான கட்டப் பஞ்சாயத்துகளில் நேரடியாக ஆம்ஸ்ட்ராங்கிற்கு பல்வேறு வகைகளில் ரவுடிகள் மற்றும் நிழல் உலக தாதாக்களோடு பிரச்னை ஏற்பட்டு வந்த நிலையில், சென்னை புறநகர் பகுதிகளில் முக்கிய பிசினஸாக பார்க்கப்படும் ஸ்கிராப் பிசினஸிலும் ஆம்ஸ்ட்ராங் தரப்பின் தலையீடு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்தவகையில் ஆம்ஸ்டாராங்குக்கும் சம்போ செந்திலுக்கும் இடையே மோதல் ஏற்பட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இதனால், தலைமறைவாக உள்ள சம்போ செந்திலை போலீசார் தேடி வருகின்றனர்.

கடந்த 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம், தேனாம்பேட்டை பகுதியில் காரில் சென்று கொண்டிருந்த ரவுடிகளான சிடி மணி மற்றும் காக்கா தோப்பு பாலாஜி ஆகியோர் மீது வெடிகுண்டு வீசிய சம்பவத்தில் சம்போ செந்தில் தலைமறைவானார். அப்போது அவர் வெளிநாடு தப்பிச்செல்லாமல் இருப்பதற்காக 2020 ம் ஆண்டு ஏப்ரல் மாதம் லுக் அவுட் நோட்டீஸ் தேனாம்பேட்டை போலீசாரால் பிறப்பிக்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது

இதன்பிறகு அவரது மனைவி விவாகரத்து பெற்று ஓஎம்ஆர் பகுதிக்கு சென்றதாகவும், சிஐடி நகரில் மனைவி தனியாக பிரிந்து வாழ்ந்து வந்ததாகவும் தகவல் கிடைத்துள்ளது. தொடர் விசாரணையில், இருவரும் தலைமறைவாகியுள்ள விவகாரமானது தற்போது தெரியவந்துள்ளது.

சம்போ செந்தில் மீது பிறப்பிக்கப்பட்ட லுக் அவுட் நோட்டீஸ் தற்போது வரை இருந்து வரும் நிலையில் போலி பாஸ்போர்ட்டுகள் மூலம் இருவரும் வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்றுள்ளனரா? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

தற்போதும் சம்போ செந்தில் தலைமறைவாக இருந்தாலும் சென்னை புறநகர் பகுதிகளில் நடக்கும் ஸ்கிராப் பிசினஸில் ஆதிக்கம் செலுத்தி வருவதும் போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

ஆற்காடு சுரேஷ் படுகொலை, கட்டப்பஞ்சாயத்து விவகாரம், ஸ்கிராப் பிசினஸ் மோதல் விவகாரம் என பல கோணங்களில் ஆம்ஸ்ட்ராங் படுகொலை விவகாரம் தற்போது விரிவடைந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...