No menu items!

தீபாவளிக்கு தங்கம், டிவி, பிரிட்ஜ், ஏ.சி, செல்போன் விற்பனை படுஜோர்!

தீபாவளிக்கு தங்கம், டிவி, பிரிட்ஜ், ஏ.சி, செல்போன் விற்பனை படுஜோர்!

தீ​பாவளி பண்​டிகையை ஒட்டி நாடு முழு​வதும் ரூ.85 ஆயிரம் கோடிக்கு தங்​கம் விற்​பனை ஆகி உள்​ளது. இந்​தியா முழு​வதும் ஒரே சீரான வரி விதிப்பை உறுதி செய்​வதற்கு கடந்த 2017-ம் ஆண்டு ஜூலை 1-ம் தேதி சரக்கு மற்​றும் சேவை வரி (ஜிஎஸ்​டி) அறி​முகம் செய்​யப்​பட்​டது. இந்​நிலை​யில் 5%, 12%, 18% மற்​றும் 28% என 4 அடுக்​கு​களாக இருந்த ஜிஎஸ்டி கடந்த மாதம் 22-ம் தேதி 5%, 18% என 2 அடுக்​கு​களாக மாற்​றப்பட்டது.

இது ஜிஎஸ்டி 2.0 என்​றும், நாட்டு மக்​களுக்​கான தீபாவளிப் பரிசு என்றும் பிரதமர் நரேந்​திர மோடி அறி​வித்​தார். இந்​நிலை​யில் இதுதொடர்​பாக அண்​மை​யில் செய்​தி​யாளர்​களுக்கு பேட்​டியளித்த மத்​திய நிதி​யமைச்​சர் நிர்​மலா சீதா​ராமன் கூறியதாவது:

கடந்த செப்​டம்​பர் மாதம் ஜிஎஸ்டி குறைப்​பால் நுகர்​வோருக்கு நல்ல பலன் கிடைத்​துள்ளது. கார், ஏசி, வாஷிங் மெஷின், டிவி உள்​ளிட்ட பொருட்​களின் விற்​பனை அதி​கரிக்கும். பண்​டிகை காலத்​தில் மோட்​டார் சைக்​கிள்​கள், டிராக்​டர்​கள் விற்​பனை வேக​மாக உயரும். பிரதமரின் தீபாவளி பரிசு மக்​களை முழு​மை​யாக சென்றடையும்.

உள்​நாட்டு பொருட்களுக்கு மக்​கள் முன்​னுரிமை அளித்​துள்​ளனர். தற்​சார்பு இந்​தி​யா​வின் வளர்ச்​சிக்கு புதிய உற்​சாகம் ஏற்​பட்​டுள்​ளது. ஜிஎஸ்டி வரி குறைப்​பின் பலன் மக்​களுக்கு நேரடி​யாக சென்​றுள்​ளது. இவ்வாறு அவர் கூறினார்.

அதற்​கேற்ப இந்த ஆண்டு தீபாவளி விற்​பனை நாடு முழு​வதும் அதி​கரித்​துள்​ளது. வட மாநிலங்​களில் 5 நாட்​களுக்கு தீபாவளி பண்​டிகை கொண்​டாடப்​படு​கிறது. குறிப்​பாக தீபாவளிக்கு 2 நாள் முன்​ன​தாக தந்​தேரஸ் கொண்​டாடப்​படும். லட்சுமி தேவி அருள் கிடைப்பதற்காக இந்த 2 நாட்களில் தங்கம், வெள்ளி, பாத்திரங்கள் புதிதாக வாங்கி வீட்டில் பூஜை செய்வது வழக்கம். அதன்படி, இந்த 2 நாட்களில் தங்கம், வெள்ளி அதிகளவில் விற்பனையாகி உள்ளன.

இதுகுறித்து அனைத்து இந்​திய ஜெம் அண்ட் ஜுவல்​லரி டொமஸ்​டிக் கவுன்​சில் தலை​வர் ராஜேஷ் ரோக்தே கூறிய​தாவது: இந்த ஆண்டு தீபாவளி பண்​டிகையை முன்​னிட்​டு, தந்​தேரஸ் காலத்​தில் (2 நாட்​கள்) நாடு முழு​வதும் 50 முதல் 60 டன் தங்க நகைகள் விற்​பனை​யாகி உள்​ளன. இதன் மதிப்பு சுமார் ரூ.85 ஆயிரம் கோடி.

இது கடந்த ஆண்​டின் விற்​பனை தொகை​யை​விட 35 முதல் 40 சதவீதம் ஆகும். ஆனால், விற்​பனை​யான நகை​யின் அளவைப் பொறுத்த அளவில் கடந்த ஆண்​டின் அளவிலேயே இருந்​தது. இதற்கு கடுமை​யான விலை உயர்வே காரணம்.

தீபாவளி பண்​டிகை முடி​வில் (5 நாள்) தங்​கம் விற்​பனை 100 முதல் 120 டன்னை எட்​டும் (ரூ.1 லட்​சம் கோடி முதல் ரூ.1.35 லட்​சம் கோடி) என எதிர்​பார்க்​கப்​படு​கிறது.

இந்த ஆண்டு தங்​கத்​தின் விலை கடுமை​யாக உயர்ந்​த​தால், சிலர் வெள்​ளியை வாங்​கினர். இதனால் வெள்​ளி​யின் விற்​பனை 2 மடங்கு அதி​கரித்​தது. இவ்​வாறு அவர் தெரி​வித்​தார்​.

டிவி, பிரிட்ஜ் ரூ.10 ஆயிரம் கோடி: இந்த ஆண்டு பண்​டிகைக் காலத்​தில் டிவி, பிரிட்​ஜ், வாஷிங் மெஷின், செல்​போன், ஏசி உள்​ளிட்ட மின்​னணு சாதனங்​கள் விற்​பனை ரூ.10 ஆயிரம் கோடியைத் தாண்டி உள்​ள​தாக அனைத்து இந்​திய வர்த்​தகர்​கள் கூட்​டமைப்​பின் (சிஏஐடி) புள்ளி விவரம் கூறுகிறது. மின்​னணு சாதன உற்​பத்​தித் துறை வேக​மாக வளர்ந்து வரு​வ​தாக​வும், இத்​துறை​யின் மூலம் 25 லட்​சம் பேர் வேலை வாய்ப்பை பெற்​றுள்​ள​தாக​வும் சிஏஐடி தெரி​வித்​துள்​ளது.

டாஸ்மாக்கில் 3 நாட்களில் ரூ.789 கோடி வசூல்: தமிழகத்தில் தற்போது 4,829 டாஸ்மாக் மதுக்கடைகள் உள்ளன. தினமும் சராசரியாக ரூ.150 கோடிக்கு மது விற்பனையாகிறது. சனி, ஞாயிறு உள்ளிட்ட வார இறுதி நாட்களில் ரூ.200 கோடிக்கும் பண்டிகை காலங்களில் ரூ.250 கோடிக்கும் மது விற்பனை நடைபெறும்.

இந்தாண்டு தீபாவளி பண்டிகை திங்கட்கிழமை வந்ததால் 3 நாட்கள் தொடர் விடுமுறை கிடைத்தது. இதனால் மது விற்பனையும் களை கட்டியது. தீபாவளி மற்றும் அதற்கு முந்தைய சனி, ஞாயிற்றுக்கிழமையையும் சேர்த்து 3 நாட்களில் ரூ.789.85 கோடிக்கு மது விற்பனை நடைபெற்றுள்ளதாக டாஸ்மாக் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த ஆண்டு தீபாவளி தினத்தன்று ரூ.235.94 கோடிக்கு மது விற்றது. இந்த ஆண்டு கூடுதலாக ரூ.30 கோடிக்கு மது விற்பனை நடைபெற்றுள்ளது. இந்த ஆண்டு அதிகபட்சமாக மதுரை மண்டலத்தில் ரூ.170.64 கோடிக்கு விற்பனை நடைபெற்றது. இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.

சென்னை – ரூ.158.25 கோடி; திருச்சி – ரூ.157.31 கோடி; சேலம் – ரூ.153.34 கோடி; மதுரை – ரூ. 170.64 கோடி; கோவை – ரூ.150.31 கோடி என்ற அளவில் மது விற்பனை நடைபெற்றுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...