பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடித்த ‘சர்தார்’ படம், 2022ம் ஆண்டு வெளியாகி, நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தின் அடுத்த பாகம் ‘சர்தார் 2’ என்ற பெயரில் உருவாகி உள்ளது. தீபாவளிக்கு ரிலீஸ் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் பர்ஸ்ட் லுக் அறிமுக விழா சென்னையில் நடந்தது.
இதில் கார்த்தி பேசியது: ‘‘சர்தார் என்ற தலைப்பு வைத்த காலத்தில் இருந்து, அந்த படம் மீது எனக்கு தனி ஈர்ப்பு உண்டு. கிராமத்தில் நாடக நடிகராக இருந்தவரை, ஒரு உளவாளியாக மாற்றி, பல சாதனைகளை செய்தது பல நாடுகளில் நடந்தது. அப்படிப்பட்ட வரலாறு நடந்து இருக்கிறது.
நான் அந்த மாதிரி கேரக்டரில் நடித்தது மகிழ்ச்சி. குறிப்பாக, சர்தார் விமர்சனங்களில் தனிப்பட்ட குடும்ப பிரச்னை இன்றி, நாட்டுக்காக போராடுகிறது ஹீரோ கேரக்டர் என்று எழுதினார்கள். அதுவும் சந்தோஷம். சர்தார்2 படம் பண்ணலாம், மீண்டும் சர்தாரை கொண்டு வரலாம் என்று யோசித்தோம். எதற்காக சர்தார் வருகிறார் என்று அழகாக யோசித்தார் இயக்குனர். பி.எஸ்.மித்ரன் தனது முதல் படத்தில் செல்போன் பாதிப்புகளை, அடுத்த படத்தில் வாட்டர் பாட்டில் பாதிப்புகளை சொன்னார். இதில் இன்னொரு மிரட்டலாக விஷயத்தை சொல்கிறார். ஹீரோ, வில்லன் போர், சண்டை நன்றாக இருந்தால், அந்த படம் நன்றாக இருக்கும்.அதன்படி, இதில் வில்லனாக எஸ்.ஜே.சூர்யா வருகிறார். வழக்கம்போல் இந்த படத்திலும் பிளாஷ்பேக் காட்சிகளை முதலில் படமாக்கினார் இயக்குனர். அந்த செட்டை பார்த்து மிரண்டுவிட்டேன். தயாரிப்பாளர் லக் ஷ்மன்குமாரை அழைத்து பேசினேன். இதெல்லாம் கண்டிப்பாக தேவை , நல்லா வரும் என்றார். இன்றைக்கு ஒரு தயாரிப்பாளராக இருப்பது கஷ்டம். அவர் வெற்றி பெற வேண்டும் என்று நினைக்கிறேன். இதில் வில்லனாக நடித்த எஸ்.ஜே. சூர்யாவுடன் பணியாற்றியது மறக்க முடியாதது. அவர் செட்டில் இருந்தால் யாரும் செல்போனை பார்க்க மாட்டோம். அவருடன் ஜாலியாக பேசிக்கொண்டு இருப்போம். கை திக்குபின் இதில் இசையமைப்பாளர் சாம் சி.எஸ். இணைந்து இருக்கிறார். ஒரு படம் வெளிநாட்டு படம் மாதிரி மேக்கிங் இருக்கலாம். ஆனால், கதை நம்மை சார்ந்தது இருக்க வேண்டும் என்று ஏ.ஆர்.ரகுமான் சொல்வார். அந்த மாதிரியான விஷயம் சர்தார் 2வில் இருக்கிறது’’ என்றார்.
வில்லனாக நடித்த எஸ்.ஜே .சூர்யா பேசியது: ‘‘சர்தார் 2 கதை கேட்டவுடன் உடனே ஓகே சொல்லிவிட்டேன். அந்த கேரக்டர் வித்தியாசமாக இருந்தது.நம்ம நெட்டிவிட்டி உள்ள இன்டர்நேஷனல் ஸ்பை கதை இ து. கமர்ஷியல் விஷயங்கள் அதிகம் இருக்கிறது. என்னை பொறுத்தவரையில் நல்ல கதை, நல்ல இயக்குனர்கள் கிடைக்கிறார்கள். அது இறைவன் கொடுக்கிற வரம்.அவர்கள் என்னை செதுக்குகிறார்கள். சமீபத்தில் கூட கார்த்தி, யோகிபாபுவுடன் நடித்தேன். அது அற்புதமான அனுபவம்.