No menu items!

குழந்தைக்காக விலகிய ரோஹித் சர்மா – மற்ற வீரர்கள் செய்தது என்ன?

குழந்தைக்காக விலகிய ரோஹித் சர்மா – மற்ற வீரர்கள் செய்தது என்ன?

இந்தியா – ஆஸ்திரேலியா இடையிலான கிரிக்கெட் தொடர் வரும் 22-ம் தேதி பெர்த் நகரில் தொடங்குகிறது. இந்த முதல் போட்டியில் தன்னால் ஆட முடியாது என்று பிசிசிஐயிடம் தெரிவித்திருக்கிறார் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா. ரோஹித் சர்மாவுக்கு குழந்தை பிறந்திருப்பதால் மனைவியின் அருகில் இருக்க அவர் விரும்புகிறார். அதனாலேயே இந்த முதல் போட்டியில் இருந்து அவர் விலகியுள்ளார்.

ரோஹித் சர்மாவைப் போன்று மற்ற இந்திய கிரிக்கெட் வீர்ர்களுக்கு குழந்தை பிறந்தபோது அவர்கள் என்ன செய்தார்கள் என்று பார்ப்போம்…

1976-ல் கவாஸ்கருக்கு குழந்தை பிறந்தபோது அவர் மேற்கிந்திய தீவுகளில் கிரிக்கெட் ஆடிக்கொண்டு இருந்தார். அவரும் விடுப்பு எடுக்காமல் இந்திய அணிக்காக ஆட்டத்தை தொடர்ந்தார். இந்த நிலையில் ஜமைக்காவில் நடந்த டெஸ்ட்டில் மேற்கிந்திய அணியின் பந்துவீச்சால், 5 இந்திய பேட்ஸ்மேன்கள் காயமடைந்தனர். அப்போது சக வீரரான கெய்க்வாட்டிடம், “நான் இங்கு சாக விரும்பவில்லை. ஊருக்குச் சென்று மகனைக் காண விரும்புகிறேன்” என்று கூறியுள்ளார். மகன் பிறந்து இரண்டரை மாதங்களுக்கு பிறகே கவாஸ்கரால் இந்தியாவுக்கு திரும்ப முடிந்தது.

2001-ம் ஆண்டில் மகள் பிறந்த சமயத்தில் தென் ஆப்பிரிக்க தொடரில் இந்திய அணியை வழிநடத்திக் கொண்டிருந்தார் சவுரவ் கங்குலி. ஒரு மாதத்துக்கு பிறகே அவர் குழந்தையைப் பார்த்தார்.

தோனிக்கு குழந்தை பிறந்தபோது அவர் மனைவியின் அனுமதியைப் பெற்று ஆஸ்திரேலியாவில் கிரிக்கெட் தொடரில் ஆடிக்கொண்டு இருந்தார். மகள் பிறந்த தகவலை சொல்ல குடும்பத்தினர் முயன்றபோது தோனியை தொலைபேசியில் தொடர்புகொள்ள முடியவில்லை. பின்னர் ரெய்னா மூலமாக அவருக்கு தகவல் சொல்லியிருக்கிறார்கள். குழந்தையைப் பார்க்கச் செல்லவில்லையா என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, “நான் இப்போது நாட்டுக்கான பணியில் இருக்கிறேன். குழந்தையை பிறகு பார்த்துக்கொள்ளலாம். உலகக் கோப்பைதான் முக்கியம்” என்றார். உலகக் கோப்பை தொடரை முடித்த பின்பே அவர் இந்தியா திரும்பினார்.

இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் நடந்துகொண்டு இருந்தபோதுதான் விரார் கோலி – அனுஷ்கா தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்தது. பிரசவ நேரத்தில் தன் மனைவிக்கு அருகில் இருக்கவேண்டும் என்று கூறி, இந்த தொடரின் பாதியிலேயே இந்தியாவுக்கு திரும்பினார் அப்போதைய கேப்டனான விராட் கோலி. பத்திரிகைகளில் இது மிகப்பெரிய சர்ச்சையாக மாறியது.

ஒரு முக்கிய தொடரின்போது அணியின் கேப்டனான விராட் கோலி, தனது குழந்தைக்காக தொடரை பாதியிலேயே விட்டுச் செல்ல்லாமா என்ற விமர்சன்ங்கள் எழுந்தன. ஆனால் கோலி இந்த விமர்சனங்களை கண்டுகொள்ளாமல் பிரசவத்தின்போது தன் மனைவிக்கு அருகில் இருப்பதை முக்கிய கடமையாக கருதினார். அவரைப் போலவே பும்ராவும் மனைவிக்கு குழந்தை பிறந்தபோது, கிரிக்கெட் தொடரின் பாதியில் விலகி ஊருக்கு வந்தார்.

ஒட்டுமொத்தமாக பார்த்தால், தோனி வரையிலான முன்னாள் வீரர்களுக்கு குழந்தை, மனைவியைவிட கிரிக்கெட் முக்கியமாக இருந்துள்ளது. ஆனால் இப்போதைய வீர்ர்கள் கிரிக்கெட்டைவிட தக்கள் குடும்பத்தையே அதிகம் நேசிக்கிறார்கள் என்று தெரிகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...