ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சல்மான்கான், ராஷ்மிகா மந்தனா, சத்யராஜ் நடிக்கும் படம் ‘சிக்கந்தர்’. மார்ச் 30ம் தேதி படம் ரிலீஸ். மும்பையில் நடந்த இந்த படம் தொடர்பான நிகழ்ச்சியில் பேசிய சல்மான்கான் ‘‘இதில் ராஷ்மிகா மந்தனா எனக்கு ஜோடி. என்னை விட வயது குறைவான அவருடன் சேர்ந்து நடிப்பதாக, டூயட் பாடுவதாக விமர்சனங்கள் வருகின்றன. ஒருவேளை வருங்காலத்தில் ராஷ்மிகாவுக்கு மகள் பிறந்து, அவர் நடிக்க வந்தால், அவருக்கு ஜோடியாகவும் நடிப்பேன். உங்களுக்கு என்ன பிரச்னை’’ என அதிரடியாக பேசியுள்ளார்.
மேலும் அவர் ராஷ்மிகா குறித்து பேசுகையில், ‘‘அவர் சிறந்த நடிகை, கடும் உழைப்பாளி. புஷ்பா 2 படப்பிடிப்பில் மாலை 7 மணி வரை இருப்பார். பின்னர், இரவு 9 மணிக்கு சிக்கந்தர் செட்டுக்கு வந்து காலை 6:30 மணி வரை எங்களுடன் படப்பிடிப்பு நடத்துவார், பின்னர் மீண்டும் புஷ்பாவுக்குத் திரும்புவார். அவருக்கும் உடல்நிலை சரியில்லை. கால் உடைந்த பிறகு, அவர் தொடர்ந்து படப்பிடிப்பை நடத்தினார், ஒரு நாளையும் ரத்து செய்யவில்லை. பல வழிகளில், அவர் என் இளைய பருவத்தை நினைவூட்டினார்’ ”என்றார்
இப்போது சல்மான்கான் வயது 59 , ராஷ்மிகா வயது 28. ஆகவே 31 வயது குறைவான ஒருவருடன் ஜோடியாக நடிப்பதாக என்று விமர்சனங்கள் வரவே இப்படி மேடையில் வெளிப்படையாக பொங்கியிருக்கிறார் சல்மான்கான். இந்த படத்தில் இரட்டை வேடத்தில் அவர் நடிக்கிறார். இதில் அமைச்சராக நடிப்பவர் சத்யராஜ். சிக்கந்தர் குறித்து அவர் கூறுகையில் ‘‘நான் வில்லனாக நடிப்பை தொடங்கினேன். பின்னர், 100க்கும் அதிகமான படங்களில் ஹீரோவாக நடித்தேன். பின்னர், குணசித்திர வேடங்களில் நடித்தேன். இந்த படத்தில் மீண்டும் பக்கா வில்லனாக நடித்து இருக்கிறேன். இயக்குனர் ஏ.ஆர்.முருகதாசுக்கு நன்றி. இந்த பட படப்பிடிப்பின்போது, இவர் கட்டப்பா என தனது தந்தையிடம் சல்மான்கான் என்னை அறிமுகப்படுத்தினார். நான் சின்ன வயதில் இருந்தே, அவரை பற்றி கேள்விப்பட்டு இருக்கிறேன். அவர் சிறந்த கதாசிரியர். பல ஹீரோக்கள் முன்னேற காரணமாக இருந்தவர்’’ என்று கூறியுள்ளார்.