எம்.எஸ்.பாண்டி இயக்கத்தில் சத்யா, தீபாசங்கர், ஜெயபிரகாஷ் நடிக்கும் படம் ராபர். ‘மெட்ரோ’ , ‘கோடியில் ஒருவன்’ படங்களை இயக்கிய ஆனந்த கிருஷ்ணன் இந்த பட கதை எழுதி உள்ளார். எஸ்.கவிதா தயாரித்துள்ளார். உண்மைச் சம்பவத்தை மையமாக வைத்து இந்தப் படம் உருவாகி உள்ளது. மார்ச் 14ல் ரிலீஸ்
சென்னையில் நடந்த இந்த பட பாடல், டிரைலர் வெளியீட்டுவிழாவில் கலைப்புலி எஸ்.தாணு, இயக்குனர் கே.பாக்யராஜ், நடிகைகள் அம்பிகா, ரம்பா கலந்துகொண்டனர். விழாவில் பேசிய கலைப்புலி எஸ். தாணு, ‘‘ மீண்டும் சினிமாவில் ரம்பா நடிக்கப்போவதாக பேசினார். அவர் பேசுகையில் ‘‘ரம்பாவின் கணவர் 2 ஆயிரம் கோடி சொத்துக்கு அதிபதி. சமீபத்தில் அவர் என்னிடம் பேசினார். என் மனைவி நல்ல படியாக இருக்கிறார். ஆனால், அவர் வீட்டில் சும்மா இருப்பது எனக்கு உறுத்தலாக இருக்கிறது’’ என்றார். உடனே, நான் அதுக்காக நீங்க படம் எடுக்க வேண்டாம். நானே நல்ல கேரக்டர்களை ரம்பாவுக்கு சொல்லிவிடுகிறேன். அவர் நடிக்கட்டும்’ என்றார்.
அடுத்து பேசிய ரம்பா ‘நான் என் திட்டங்களை ரகசியமாக வைத்து இருந்தேன். தாணுசார் அதை மேடையில் உடைத்துவிட்டார். ரொம்ப நாளுக்குபின் என் நண்பர்களை, சினிமாகாரர்களை பார்த்தது சந்தோஷம். சின்ன படம், பெரிய படம் என சினிமாவில் கிடையாது. நல்ல படங்கள் ஜெயிக்கும். பல பெண்கள் சினிமா தயாரித்து இருக்கிறார்கள். இந்த படத்தையும் பெண்ணான கவிதா த யாரித்தது சந்தோஷம். இப்போது சுந்தர்.சியும் நடிக்க ஆரம்பித்துவிட்டார். அந்த காலத்தில் எனக்கு டயலாக் சொல்லிக்கொடுக்கவே அவர் வெட்கப்படுவார். நாங்கள் கிண்டல் செய்வோம். இப்போது அவர் வெற்றிகரமாக நடிகராக, இயக்குனராக இருப்பது ரொம்பவே மகிழ்ச்சி. இன்றைக்கும் உள்ளத்தை அள்ளித்தா பாடலை மக்கள் பேசுகிறார்கள், ரசிக்கிறார்கள்’’ என்றார்
நடிகை அம்பிகா பேசுகையில் ‘‘இந்த பட விழாவுக்கு கே.பாக்யராஜ் வந்து இருக்கிறார். எனக்கு அவருடன் நடித்த அந்த 7 நாட்கள் படம் நினைவுக்கு வருகிறது. அப்போது எனக்கு நன்றாக தமிழ் பேச வராது. இயக்குனரான கே.பாக்யராஜ் இந்த படம் முடிவதற்குள் நான் மலையாளம் பேசிவிடுவேன் அல்லது தமிழை மறந்துவிடுவேன் என்று கிண்டல் செய்தார். அந்த படத்தில் வீடு வாடகைக்கு கொடுக்கிற டயலாக் காட்சியில், அவர் முகத்தை ஒரு மாதிரி வைத்து இருப்பார். அப்போதுநான் அவரை கிண்டல் செய்து ஒரு டயலாக் பேசினேன். அவரோ, அது பற்றி கொஞ்சமும் நினைக்காமல், நீங்க தாராளமாக பேசுங்க என்றார். அந்த டயலாக் பெரிதாக பேசப்பட்டது. அவர் பெரிய இயக்குனர், அவர் நினைத்து இருந்தால், நான் சொல்வதை மட்டும் பேசு என்று சொல்லியிருக்கலாம். ஆனால், என் சொந்த டயலாக்கை அனுமதித்தார்.