மைக் பிடித்தால் பரபரப்பு, சர்ச்சை கருத்துகளை பேசுபவர் நடிகர் ராதாரவி. சென்னையில் நடந்த வருணன் பட விழாவில் நடிகர் ராதாரவி பேசியது
‘‘எனக்கு டான்ஸ்மாஸ்டர் ஸ்ரீதரை ரொம்ப பிடிக்கும். அவர் காஸ்ட்யூம் அருமையாக இருக்கும். தான் கொரியோகிராப் பண்ணும் பாடல்களில், அவர் ஏதாவது ஒரு இடத்தில் வந்து ஆடுவார். எதற்காக ஆடுகிறார் என தெரியவில்லை. நீ சரியாக ஆடலை. என்னை பார்த்து ஆடுனு அந்த நடிகர்களை பார்த்து சொல்ல வருகிறாரா என தெரியவில்லை. நான் தேவா, அவர் சகோதரர்கள் எல்லாம் ஒரே செட். நாங்க ரொம்ப நல்லவர்கள் இல்லை. இப்ப நல்லவங்க ஆகிவிட்டோம். முடியாமை என்று ஒன்று இருக்கிறதே.
இந்த பட இயக்குனர் ஜெயவேலுக்காக படம் நடிக்கவில்லை.அவர் அப்பாவுக்காக நடிக்க ஓகே சொன்னேன். காரணம், அவர் பெயர் கருணாநிதி. எனக்கு மிகவும் பிடித்த பெயர். கலைஞர் மேடையில் பேசும்போது, அங்கே இருப்பவர்கள் பெயரை மறக்கமாட்டார். அனைவர் பெயரையும் குறிப்பிட்டு பேசுவார். அவரிடம் இருந்து அந்த பண்பை நானும் கற்றுக்கொண்டேன். பிரபல நடிகர் ஜெயபிரகாஷ் மகன் துஷ்யந்த் இதில் ஹீரோ.
இந்த படத்தில் நான் வில்லனாக நடிக்கிறார் என்று பேசினார்கள். முன்பெல்லாம் கொடூர வில்லனாக இருந்தேன். இப்ப, மற்றவர்களுக்கு ஆர்டர் போடுகிற வில்லனாக வருகிறேன். அலையோசை படப்பிடிப்பில் ‘‘ராதாரவியை நம்பாதீங்க என, என் முன்னேயே விஜயகாந்த்திடம் சில பெண்கள் குறை சொன்னார்கள். நான் சந்தோசப்பட்டேன்.
அமரன் படத்தில் என் கெட்அப்பை பார்த்த பலர், என்னை அறியாமல் டேய் சேட் என சொன்னார்கள். அந்த கெட்அப் வெற்றி. நான் கேமராவுக்கு முன்னால்தான் நடிப்பேன். பின்னால் நடிக்க தெரியாது. தேவா வின் இசை ரொம்ப பிடிக்கும். இன்னொரு சகோதரரும் மியூசிக் போடுகிறார்.ஆனால், அவரிடம் இசை வாங்குவது கஷ்டம். இது நம்ம பூமினு படம் எடுத்தேன். அந்த இசையமைப்பாளர் இசையமைத்தார்(இளையராஜா). அந்த பட பாடலை வாங்கிட்டு வா என அந்த பட இயக்குனர் பி.வாசு சொன்னார். நான் காத்திருந்தேன். நேரம் இல்லாத காரணத்தால் பழைய பாடலை சுட்டு கொடுத்தார் அந்த இசையமைப்பாளர். அதை கேட்டு ரொம்ப ஊசி போய்விட்டது. இழுத்தால் நுால் வருகிறேதே என்றேன். அவர் அதை ரசித்தார். ராதாரவி இப்படி சொல்கிறார் என மற்றவர்களிடம் கூறினார்