தமிழன் படம் மூலமாக சினிமாவில் அறிமுகமானவர் தான் நடிகை பிரியங்கா சோப்ரா. இயக்குநர் மஜித் இயக்கத்தில் விஜய், ரேவதி, நாசர், விவேக், பிரியங்கா சோப்ரா, வினு சக்ரவர்த்தி, டெல்லி கணேஷ், எம்.எஸ். பாஸ்கர் என்று ஏராளமான நட்சத்திரங்கள் நடிப்பில் 2002 ஆம் ஆண்டு திரைக்கு வந்து ஹிட் கொடுத்த படம் தான் தமிழன். இந்தப் படத்தில் ஹோம்லி லுக்கில் பிரியங்கா சோப்ரா ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டார்.
இந்தப் படத்திற்கு அவர் தமிழில் எந்த படத்திலும் நடிக்கவில்லை. தொடர்ந்து பாலிவுட் படங்களில் மட்டுமே அதிக கவனம் செலுத்தி வருகிறார். பாலிவுட் தவிர, இங்கிலிஸ் மற்றும் மராத்தி மொழிகளில் ஒரு சில படங்களில் நடித்துள்ளார். சினிமாவில் நடித்துக் கொண்டிருக்கும் போது நிக் ஜோன்ஸ் என்ற ஹாலிவுட் பாடகரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவருக்கு பிரியங்கா சோப்ராவை விட 10 வயது குறைவு. பிரியங்கா சோப்ராவிற்கு 41 வயதாகும் நிலையில், நிக் ஜோன்ஸிற்கு 31 வயதாகிறது.
இருவரும் கடந்த 2018 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இதையடுத்து 2022 ஆம் ஆண்டு இவர்களுக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. இந்த நிலையில் தான் பிரியங்கா சோப்ராவின் சகோதரர் சித்தார்த் சோப்ராவிற்கு 7ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. சித்தார்த் சோப்ரா நடிகையான நீலம் உபாத்யாயாவை திருமணம் செய்து கொண்டார். இந்த திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.
இந்த நிலையில் தான் இந்த திருமண நிகழ்ச்சியில் பிரியங்கா சோப்ரா அணிந்திருந்த நெக்லஸ் தான் இப்போது சோஷியல் மீடியாவில் அனைவரது கவனம் ஈர்த்தது. அதோடு, அதிகளவில் பேசு பொருளாகவும் மாறியிருக்கிறது. அப்படி அந்த நெக்லஸில் என்ன ஸ்பெஷல், எதற்காக் அந்த நெக்லஸ் அனைவரது கவனம் ஈர்த்தது என்பது பற்றி அறிந்து கொள்வோம். பிரியங்கா சோப்ராவின் சகோதரர் சித்தார்த் சோப்ரா சமீபத்தில் நீலம் உபாத்யாயாவை மணந்தார். இந்த திருமணம் மும்பையில் நடைபெற்றது. திருமணத்தில் பிரியங்கா அனைவரையும் கவர்ந்தார். அவர் அணிந்திருந்த நெக்லஸைப் பற்றி அறிந்து கொள்ளுங்கள். பிரியங்கா சோப்ரா சித்தார்த்-நீலம் திருமணத்தில் அணிந்திருந்த நெக்லஸை உருவாக்க 1600 மணி நேரம் பிடித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
1600 மணி நேரம் என்றால் கிட்டத்தட்ட 67 நாட்கள். மரகதம் மற்றும் வைரம் கொண்டு செய்யப்பட்ட அந்த நெக்லஸின் விலை ரூ.12 கோடி இருக்கும் என்று சொல்லப்படுகிறது. பிரியங்கா சோப்ரா இந்த நெக்லஸை மணீஷ் மல்ஹோத்ரா வடிவமைத்த பிர்சா நீல நிற லெஹங்காவுடன் அணிந்திருந்தார். சித்தார்த் மற்றும் நீலமின் திருமணத்திலிருந்து, பிரியங்கா சோப்ரா தொடர்ந்து பேசப்பட்டு வருகிறார், மேலும் அவரது லுக் அனைவராலும் பாராட்டப்படுகிறது. பிரியங்காவின் லுக்கில் அவரது நெக்லஸ் மெருகூட்டியது. இது 200 கேரட் மரகதம் மற்றும் வைரத்தால் ஆனது என்று கூறப்படுகிறது. பிரியங்கா சோப்ரா மற்றும் அவரது நெக்லஸின் படங்கள் வைரலாகி வருகின்றன. மேலும் மக்கள் அவரைப் பாராட்டுகிறார்கள்.
பிரியங்கா சோப்ராவின் சகோதரர் சித்தார்த் மற்றும் நீலம் உபாத்யாயாவின் நிச்சயதார்த்தம் ஆகஸ்ட் 2024 இல் நடைபெற்றது. பிப்ரவரி 7, 2025 அன்று திருமணம் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. பிரியங்கா சோப்ரா தனது சகோதரர் திருமணத்தில் அணிந்திருந்த நெக்லஸ் தான் இப்போது பேசும் பொருளாக மாறியிருக்கிறது. அதற்கு காரணம் அந்த நெக்லஸ் கிட்டத்தட்ட 1600 மணி நேரத்தில் செய்யப்பட்ட வைர-மரகத நெக்லஸ் என்பது குறிப்பிடத்தக்கது.