ஆந்திர மாநில துணை முதல்வர் பவன்கல்யாண் நடிப்பில் உருவாகி உள்ள, ஹரி ஹர வீர மல்லு ‘ படம், மார்ச் 28ம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது. ஜோதி கிருஷ்ணா, கிரிஷ் இயக்கியுள்ள இந்த படம் தமிழிலும் வெளியாகிறது.
இது குறித்து படக்குழு கூறியது ‘‘ஆந்திரா, தெலுங்கானாவில் மட்டுமல்ல, உலகம் முழுக்க பவன்கல்யாணுக்கு ரசிகர்கள் அதிகம். ஆனால், அவரோ ஒரு கட்டத்தில் அரசியலுக்கு நகர்ந்தார். ஜனசேனா கட்சியை தொடங்கினார். கடந்த சட்டசபை தேர்தலில் சந்திரபாபுநாயுடுவுடன் கூட்டணி அமைந்தார். அந்த கூட்டணி வெற்றி பெறவே துணை முதல்வர் ஆனார். சினிமாவில் நடிப்பதை நிறுத்திவிட்டார். அவர் நடித்த படம் வெளியாகியும் சில காலம் ஆகிவிட்டது. இந்நிலையில், அவர் நடிப்பில் வெளியாகாமல் இருந்த ஹரி ஹர வீர மல்லு வரும் மார்ச் 28ம் தேதி ரிலீஸ் ஆகிறது.
தமிழில் இந்தியன், கில்லி, துாள் போன்ற வெற்றி படங்களை தயாரித்த ஏ.எம். ரத்னம் படத்தை தயாரிக்க, அவர் மகன் ஜோதிகிருஷ்ணாவும், கிரிஷ்சும் இணைந்து இயக்கி உள்ளனர். ஆஸ்கர் விருது பெற்ற கீரவாணி இசையமைத்துள்ளார் பவன் கல்யாணம் ஜோடியாக நிதி அகர்வால் நடித்துள்ளார். அனசுயா பாரத்வாஜ் மற்றும் பூஜிதா சிறப்பு நடனம் ஆடியுள்ளனர். துணைமுதல்வர் ஆனபின் பவன்கல்யாண் நடிப்பில் வெளியாகும் படம் என்பதால் படத்துக்கு நல்ல வரவேற்பு உள்ளது. தெலுங்கு தவிர, தமிழ், கன்னடம், மலையாளம், இந்தியிலும் படம் ரிலீஸ் ஆகிறது