கேரளாவில் ஹேமா கமிசன் திரையுலகில் ஏற்படுத்தியுள்ள அதிர்வு மாநிலம் தாண்டி எதிரொலித்து வருகிறது. மலையாள சினிமாவில் அடுத்த அதிரடியாக நிவின்பாலி மீது செக்ஸ் புகார் எழுந்துள்ளது.
நேர்யமங்கலம் பகுதியைச் சேர்ந்த, இளம் பெண் ஒருவர் நிவின் பாலி தனக்குப் பட வாய்ப்பு வாங்கி தருவதாகக் கூறி, வெளிநாட்டிற்கு அழைத்து சிலருடன் பாலியல் தொந்தரவு கொடுத்ததாகக் கொச்சி ரூரல் எஸ்.பி-க்கு புகார் அளித்தார். அவர் கொடுத்த அந்த புகார் ஊன்னுகல் காவல் நிலையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இது பற்றி நிவின் பாலி கூறியதாவது, ஒரு பெண்ணை பாலியல் துன்புறுத்தலுக்கு நான் ஆளாக்கியதாக தவறான செய்திகள் வெளியாகியுள்ளதை கண்டேன். அது முற்றிலும் உண்மைக்கு மாறானது. அந்தக் குற்றச்சாட்டுகள் அனைத்தும் அடிப்படை ஆதாரமற்றவை என்று நிரூபிக்க எந்த எல்லைக்கும் செல்வேன். அதற்கு உரிய சட்ட ரீதியான நடவடிக்கைகளை எடுப்பேன்” என்று கூறியுள்ளார்.
இந்த நிலையில் நடிகை ஷகீலா சமீபத்தில் இந்த விவகாரம் குறித்து பேசியபோது, மலையாளத்தில் நான் நடித்த படங்களில்
நான் நடிக்க தொடங்கிய காலத்தில் ஒரு நடிகையாக எங்களால் உடையை கூட சரியான இடத்தில் மாற்றிக்கொள்ள முடியாது. ரிமோட்டான இடங்களுக்கு ஷூட்டிங் செல்லும் பொழுது, மேலே ஒரு பெரிய ஆடையை போட்டுக்கொண்டு, ஏற்கனவே நாங்கள் அணிந்திருக்கும் ஆடைகளை மாற்றும் நிலைகூட எங்களுக்கு ஏற்பட்டுள்ளது”.
“எங்களை சுற்றி நூற்றுக்கணக்கான ஆண்கள் அப்போது நின்று கொண்டிருப்பார்கள் என்பது தான் வேதனையின் உச்சம். இப்போது உள்ளது போல அப்போது கேரவன்கள் கலாச்சாரமும் பெரிய அளவில் கிடையாது. இன்னும் சொல்லப்போனால் நீங்கள் நினைப்பது போல கேரவேனில் உடைமாற்றும் விஷயங்கள் மட்டும் நடப்பதில்லை. உள்ளே சில பேர் ஒன்றாக கூடி உணவு உண்பார்கள், சில நேரங்களில் உடலுறவு கூடகொள்வார்கள்.”
“இதை நான் நேரில் பார்த்ததில்லை என்றாலும், பல நேரங்களில் இது குறித்த விஷயங்களை என் காதார கேள்விப்பட்டிருக்கிறேன். ரூபாஸ்ரீ என்ற நடிகை திரைப்பட ஷூட்டிங்கின்போது, ஒரு அறைக்குள் இருந்தார். அப்போது நடிகர் ஒருவர் அவருடைய அறை கதவை தட்டி, அவரை வெளியே அழைத்து, அவருக்கு உதவி ஏதும் தேவைப்படுமோ என்று எண்ணி அதனால் கதவை தட்டியதாக கூறியிருக்கிறார் என்றார் ஷகீலா.